'திரை மறைவு போராட்டம்' : பர்தா அணிந்த பெண்கள் தாலிபானுக்கு ஆதரவாக பேரணி

ஆப்கானிஸ்தானில் தலிபான் அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு  இருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று காபூலில் முழுமையாக பர்தா அணிந்த பெண்கள் தாலிபான்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2021, 10:17 AM IST
  • 300 பர்தா அணிந்த பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்
  • தலிபான்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  • அஷ்ரப் கனி அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்.
'திரை மறைவு போராட்டம்' : பர்தா அணிந்த பெண்கள் தாலிபானுக்கு ஆதரவாக பேரணி title=

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு  இருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று காபூலில் முழுமையாக பர்தா அணிந்த பெண்கள் தாலிபான்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

காபூலில் சுமார் 300 பர்தா அணிந்த பெண்கள் தலிபான்களின் பாதுகாப்பின் கீழ் பேரணியில் ஈடுபட்டனர். தலை முதல் கால் வரை, முழுமையாக மூடப்பட்ட கருப்பு நிற  பர்தா அணிந்த பெண்கள், தலிபான்கள் தான் தங்களை காக்கும் அரசு என்று கூறி, அவர்களை எதிர்க்கும் மேற்கத்திய நாடுகள், ஆப்கான்  விவகாரங்களில் தலையிடுவதாக  குற்றம் சாட்டினர்.

தலிபான்களுக்கு ஆதரவாக முழக்கங்கள்

பர்தா அணிந்து பேரணி நடத்தும்பெண்களின் பாதுகாப்புக்காக, தாலிபான் பயங்கரவாதிகள் (Taliban Jihadis) துப்பாக்கி ஏந்திக் கொண்டு நின்றதாக கூறப்படுகிறது. பெண்கள் தங்கள் கைகளில் தாலிபான் கொடிகளை ஏந்தியிருந்தனர். அவர் தலிபான்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார், பின்னர் காபூல் பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்

ஊர்வலத்தில் பங்கேற்ற பர்தா அணிந்த பெண், தலிபான்களுக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்தும் பெண்களை  தாங்கள் எதிர்ப்பதாக கூறினர். தாலிபான்களுக்கு எதிராகப் பேசும் பெண்கள், ஆப்கான் நாட்டின் பெண்களின் பிரதிநிதிகள் அல்ல என்று  பர்தா அணிந்த பெண் வலியுறுத்தினார்.

அஷ்ரப் கனி அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

முந்தைய அரசாங்கம் பெண்களை தவறாக நடத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டினார். முந்தைய அரசு, (Afghanistan Government) பெண்களை பணிக்கு தேர்வு செய்யும் போது,  அழகின் அடிப்படையில் மட்டுமே அரசு வேலைகளில் சேர்த்துக் கொண்டிருந்தனர் என குற்றம் சாட்டினார்.

காபூல் பல்கலைக்கழகத்தின் மாணவி ஷபானா ஓமரி, "பர்தா ஹிஜப்  அணியாத பெண்களால் பிரச்சனை ஏற்படுகிறது" என்று கூறியதோடு, நாங்கள் தாலிபான் அரசாங்கத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்" என்றார்.

அரசாங்கத்தில் பெண்களுக்கு இடமில்லை
ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை சேர்க்கவில்லை. அதோடு, பெண்கள் குழந்தை பெற்றால் போது, என கூறியதோடு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது, அவர்கள் விளையாடவும், பர்தா இல்லாமல் வெளியே செல்லவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறீப்பிடத்தக்கது.

ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News