சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சசிகவுக்குக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சத்திய நாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக மற்றப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சோதனையின் போது ரூபாவிடம் அதிகாரிகள் கூறினார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் சுடிதார் அணிந்து கொண்டு சுற்றி வரும் மற்றொரு வீடியோ வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் சபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறைவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என டி.ஐ.ஜி., ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு அறிக்கை அனுப்பினார்.
''நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை" என்று எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான கருணாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவுக்குப் பின்னர் ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.,க்களுக்கு சசிகலா தரப்பில் ரூ. 2 கோடி முதல் ரூ. 10 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா திடீரென வந்து உள்ளார்.
போயஸ் தோட்டத்திற்கு சென்ற ஜெ.தீபா ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா:-
பணத்திற்காக சொந்த அத்தையான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவுடன் சேர்ந்து கொன்று விட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா திடீரென வந்து உள்ளார்.
போயஸ் தோட்டத்திற்கு சென்ற ஜெ.தீபா ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர், போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமைகொண்டாடி வருகின்றனர்.
இதில், தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கியுள்ளார். அவரது சகோதரர் தீபக், தற்போது சசிகலாவின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர் போயஸ் கார்டனில் வசிக்கத் தொடங்கியுள்ளார்.
டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்டார்.
தினகரனுடன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் நடவடிக்கை குறித்தும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரன் சசிகலாவை இன்று பெங்களுர் சிறையில் சந்திக்க புறப்பட்டார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் இந்த வழக்கில் சிக்கிய மேலும் மூன்று வருடம் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமின் கோரி, டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த டெல்லி கோர்ட் டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கியது.
டிடிவி தினகரன் சசிகலாவை நாளை பெங்களுர் சிறையில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் இந்த வழக்கில் சிக்கிய மேலும் மூன்று வருடம் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமின் கோரி, டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த டெல்லி கோர்ட் டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது. இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் அதிமுக பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இரண்டரை மாத கால இடைவெளிக்கு பிறகு, 2 அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது..
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு அணி யாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோ உரையாடலை விரைவில் வெளியிடுவேன் என்று சசிகலா சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல் - அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் அதிமுகவை மற்றும் அல்ல தமிழகத்தையே உலுக்கியது.

சசிகலாவை சந்தித்து ஆலோசனை செய்த பின் தான் ராஜினாமா குறித்து முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-விலிருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. மேலும் நான் நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.
அமைச்சர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட தான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறினார்.
கட்சியில் சிலருக்க ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவசரகதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.