பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு வீரர், வீராங்கனைகள் 15 மாதங்களாக நடத்திய போராட்டமே காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித்தந்த சாக்ஷி மாலிக் தற்போது மல்யுத்த விளையாட்டைக் கைவிடுவது பேரழிவான செயல் என நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
Wrestlers Protest: பபிதா போகத் மல்யுத்த வீரர்களை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், தனது எதிர்ப்பை பலவீனப்படுத்துவதாகவும் சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டினார்
Wrestlers Protest: மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசவில்லை. பஜ்ரங், சாக்ஷி, வினேஷ் தங்கள் பதக்கங்களை திகாயிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரச்னையை தீர்க்க மத்திய அரசுக்கு 5 நாள் கெடு.
Wrestlers Protest: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டெல்லி ஜந்தா் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் விசப் போவதாக அறிவித்துள்ளதால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர். வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராஜிவ் கேல் ரத்னா விருதுகைள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கு கவுரவித்தார்.
சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் வீராங்கனை சிந்து வெள்ளி பெற்றார். இது போல் சாக்ஷி வெண்கலம் வென்றார், தீபா கர்மாகர் அவர்கள் 4-வது இடம் பெற்றார். இவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இதனையொட்டி கடந்த வாரம் 2016-ம் ஆண்டுக்கான கேல் ரத்னா, துரணோச்சாரியார், அர்ஜீனா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை பிரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய சாதனை படைத்தார். நாடு திரும்பிய சாக்ஷி, இன்று அதிகாலை டில்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், பொதுமக்கள் அவரை வரவேற்றனர். சாக்ஷி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாட்டின் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜிம்னாஸ்டிக் தீபாகர்மாகர், பேட்மிண்டன் சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், துப்பாக்கிச்சுடுதல் வீரர் ஜித்துராய் ஆகிய நான்கு பேரும் இந்த விருதை பெறுகின்றனர்.
நடந்த 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 22-ம் தேதி நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், இந்தியா 67-வது இடத்தையும் பிடித்தது.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கிற்கு விருதுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு மட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகளும் அவருக்கு விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.