சுவீடன் பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டன் வந்தடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 76_வது வயதில் கடந்த மாதம் 14-ம் தேதி காலமானார். அவருக்கு நேற்று லண்டனில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
லண்டனில் பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிக்கவும், சிலை நிறுவிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
லண்டனில் சுரங்க பாதையில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்தால், ரயில் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி உள்ளனர். மேலும் பலருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது என லண்டன் மெட்ரோ செய்தித்தாள் கூறியுள்ளது.
தற்போது அங்கு மீட்பு பணியும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
லண்டன் நகரில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அதிவேகமாக பரவி வருகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தீயணைப்பு படைகள் விரைந்தனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்கெட்டில் உள்ள மூன்று மாடிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.
நீண்ட நேரம் இந்த தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் கட்டடம் வெடித்துவிடும் என்றுமக்கள் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.
லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.
இதில் 27 மாடி கட்டிடத்தில் 2-வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது. தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள், 200 வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்து வருபவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
மேலும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.