பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படும் இடங்கள்:-
மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து ரூ. 68.83 ஆக உள்ளது.
வெளிநாட்டு பங்குச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் இருந்து அந்நிய நிதியை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது , ரூபாய் மதிப்பு 2.5 சதவீதம் என்ற அளவிற்கு சரிந்து 68.86 என்ற நிலையை எட்டியது.
மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்க மாநிலங்களைவைக்கு வந்துள்ளார்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாக வாழும் கலை (தி ஆர்ட் அப் லிவிங்) அமைப்பின் நிறுவனம் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் கூறினார்.
தற்போது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பினும், இது விரைவில் தீரும் என நம்பிக்கைத் தெரிவித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இவ்விஷயத்தில் பொறுமை காக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி பிரதமர் மோட்டி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே என்றும் தெரிவித்தார்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நீங்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரிக்கிறீர்களா என்று நேரடியாக பதில் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை 21000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜன் தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தினால், சலுகைகள் பறிபோகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பஜார் நிறுவனம் வரும் நவம்பர் 24-ம் தேதி முதல், ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க உள்ளதாக, அறிவித்துள்ளது.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நீங்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரிக்கிறீர்களா என்று நேரடியாக பதில் கேட்கிறார்.
திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசின் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கையை பாரட்டியுள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர். ஒரே நபர் மீண்டும் மீண்டும் வருவதால்தான் வங்கிகளில் நீண்ட வரிசை ஏற்படுகிறது. இதனை தடுக்கு விதமாக மத்திய அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
* இன்று முதல் வங்கியில் பழைய நோட்டுக்கு ரூ.4500லிருந்து ரூ. 2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும்.
பாராளுமன்றம் இன்று 2 வது நாளாக கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை அவர் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார்.
இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
பழைய நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவிப்புக்கு பில்கேட்ஸ் வரவேற்றுள்ளார்.
கடந்த 8-ம் தேதி கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் மக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். ஏடிஎம் மையங்களில் ரூ.2,500 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.