மத்திய பிரதேசத்தில் திடீர்ரென ஆம்புலன்ஸ் மீது டிராக் இடையே மோதிக்கொண்டதில் நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் மற்றும் வேன் ஒட்டுனர் காயமடைந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பாத்தோவில் இருந்து கே.வி. ஸ்கூல், செனானி, கான்வென்ட்டின் மாணவ மாணவிகள் சென்ற வேன், படோவில் மற்றொரு வாகனம் மீது மோதியது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுனர் முஷ்டாக் அகமது, மற்றும் மாணவர்கள் சிகிச்சைக்காக சமுதாய நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கட்டட இடிபாட்டிற்குள் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஏற்ப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இடிந்த கட்டடத்தில் 6 வீடுகளில் குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து கார்த்திகா என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கரத்தினை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சேர்த்துவைத்து மருத்துவர்கள் சாதித்தனர்.
பிரான்சில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பிரான்ஸ் மறுத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையானது நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள மைய மருத்துவமனையான யுனிவெர்சிட்டி கிரேநோப்ல் அல்பெஸ் மருதுவமனியின் இரண்டு மருத்துவர்கள் குழு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.
பங்களாதேஷை சேர்ந்த 40 வயதுடைய பெண்மணி ஒருவரின் காலின் எடை மட்டும் 60 கிலோவை தாண்டியது. இவர் யானைக்கால் நோயால் பதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் ரெஜியா பேகம் எனவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது மகள் பிறப்பினை தொடர்ந்து அதுமுதல் இந்த நோயாள பாதிக்கப்பட்டுள்ளார்.
ரெஜியா பேகமின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் அவர் தெளிவாக இல்லை என்றாலும், அவளுடைய உறவினர்கள் இவரை ஒதுக்கி வைத்திருப்பது மனஉளைச்சலை தருவதாக கூறுகிறார்.
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.