சில காலங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு சமூகவலைத்தளத்திலிருந்து வெளியேறினார். அந்த வகையில் நடிகர் சிம்பு நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ பார்க்க.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு பண மதிப்பிழப்பு திட்டம் அறிவித்து ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பது என்ற நோக்கத்துடன், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருந்தது. உள்ளது. ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் பிற வீரர்கள் கால்பந்து விளையாடி வருகின்றனர்.
வீடியோ:
இந்திய விமானப் படை விமானங்கள் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று இறங்கியது. 20 விமானங்கள் நெடுஞ்சாலையில் தரை இறங்குகின்றன.
லக்னோ - ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை நடைபெற்று வருகிறது. அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்வது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையின் முதல் கட்டமாக 16 இந்திய விமானப்படையினர் போர் விமானங்கள் தரையிறக்கம் செய்யப்பட்டது. லக்னோ - ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை வீடியோ:-
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கலைக்கட்டி கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவரின் சொந்த ஊரில் உள்ள தியோரி கோவியிலில் சாமி தரிசனம் செய்தார். டோனியின் வருகையால் அங்கு ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
Jharkhand: Cricketer Mahendra Singh Dhoni offered prayers at Deori temple in Bundu's Tamar pic.twitter.com/s0ykN9SEqx
அப்பா டோனிக்கு மகள் ஸிவா தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. போட்டிகள் இல்லாத நேரத்தில் இவர் தனது மகளுடன் நேரத்தை செலவழிக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் அவர் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பயிற்சி ஆட்டத்துக்குப் பின் கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவரது மகள் ஸிவா மைதானத்திற்கு வந்து அப்பாவுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘இப்படை வெல்லும்’. இப்படத்தின் இசை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
‘இப்படை வெல்லும்’: இப்படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். உதயநிதி, மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
’லைகா’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பூமிக்கு அருகே 42,000 கி.மீட்டர் தொலைவில் இன்று எரிகல் ஒன்று கடக்கவிருப்பதாக சர்வதேச எரிகல் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு எரிகல் பூமிக்கு அருகே அதாவது 42,000 கி.மீட்டர் தொலைவில் இன்று வர இருப்பதாக சர்வதேச எரிகல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த எரிகல்லுக்கு 2012 TC4 என்று பெயரிட்டுள்ளனர். அளவில் 15 முதல் 30 மீட்டரில் இருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் முக்கியமான விசயம், ஆனால் அது அவ்வளது எளிது அல்ல. ஆனாலும் அனைவரும் உடற்பயிற்சியினை முயற்சிக்க வேண்டும் எனவும் தன் கருத்தினை பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. ஈக்வெடார் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, உலக கோப்பை வாய்ப்பை பிடித்தது.
ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில், அசத்தலாக 2 கோல்களைப் போட்டார் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. பின்னர் 3-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவாடர் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா. மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல், அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பையில் தகுதிபெற வைத்தது.
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் வீடியோ:-
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் டோனியின் மகள் ஸிவாவுடன் விளையாடி பொழுது போக்கிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில்நடைபெற்று இந்தியா வெற்றி பெற்றது.
சமூக வலைதளங்களை உபயேகிப்பதில் கவனக்குறைவு, முன்னெச்சரிக்கை இன்மை போன்ற காரணங்களால் பலர் தங்களை வாழ்கை இழந்துள்ளனர். இதுபோன்ற கதைகளை நாம் நிஜ வாழ்விலும் சரி, திரைபடங்கள் வாயிலாகவும் சரி நிறையவே பார்த்திருக்கின்றோம்.
குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் பதியப்படும் பதிவுகள், புகைப்படங்கள் நம் அனுமதி இன்றி சிலரால் திருடப்பட்டு தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?... பிரபல பதிவுதளமான ட்விட்டர் நிறுவனம் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களை காப்பாற்ற சில வழிகளை வீடியே வாயிலாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் பிறந்து புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்த 8 வயதான விர்சவியா பரூன் சிறுமி அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார். உலகில் 5.5 லட்சம் பேர்களில் ஒருவருக்கு தான் இந்த நோய் வரும் வரும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை மூலம் இந்த நோயை சரி செய்ய முடியாது. மீறினால் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் என் மகளுக்கு இந்த நோய் சரியாகிவிடும் என நம்பிக்கையுடன் அவரது தயார் கூறினார்.
தற்சமயம் அந்த சிறுமி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பில்ஹவுர் நிவாடா கிராமத்தில் உள்ள ஆரசு ஆரம்ப பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடியே வகுப்புக்கு வந்த ஆசிரியர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் தள்ளாடியபடியே வகுப்புக்கு வந்த ஆசிரியர் தன் தலையைக் கூட நிமிர்த்த முடியாத நிலையில் நாற்காலியில் அமர்திருக்கிறார். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அந்த ஆசிரியரை கேலி செய்து சிரித்து விளையாடுகின்றனர். இந்த சம்பவத்தை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கவும்.
ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'மேயாத மான்'. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். மேலும் வைபவ் – ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். ஏற்கனவே படத்தில் இருந்து `தங்கச்சி’ மற்றும் `என்ன நான் செய்வேன்’ என்ற இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நதிகளை மீட்பதை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது கூட்டத்தினர் முன்னிலையில், அஜித்தின் புகழ் வாய்ந்த 'ஆலுமா டோலுமா' பாடல் மெட்டில் 'ஆறுமா ஆறுமா' என்ற வரிகளில் பாடல் ஒன்றை பாடினார்.
அந்த பாடல் வீடியோவை நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
வீடியோ பார்க்க:-
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஹிப் ஹாப் ஆதி ஆடும் வீடியோ டிவிட்டரில் தற்போது செய்யப்பட்டுள்ளது.
மோகன்லால் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் ஒரிஜினல் வீடியோவை விட ஷெரில் அன்ட் கோ ஆடிய வீடியோ தான் மிகவும் பிரபலமாகியுள்ளது.
பலர் ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவை பார்க்க ஷெரில் தான் காரணம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மீசைய முறுக்கு படத்தில் ஆதி மாட்டிக்கிச்சு பாடலுக்கு ஆடியது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பொருத்தமாக உள்ளது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
அந்த வீடியோ-வை பார்த்து ஹிப் ஹாப் ஆதி ரீ-டிவிட் செய்துள்ளார்.
இணையத்தில் வைரலாக பரவி வரும் சச்சினின் முதல் சதம் வீடியோ!
சச்சின் டெண்டுல்கர் 1989-ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றர், எனினும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் தனது முதல் சதத்தினை அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.