எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
முன்னதாக ’மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன்; சென்னை உயர் நீதிமன்றம் ‘அரசு சார்பில் கொண்டாடப்படும் விழாக்களில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அரசுப்பள்ளி மாணவ-மாணவியரை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்’ என மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா, கடந்த 1-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித்த தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை, மாணவி அனிதாவை யாரோ மூளை சலவை செய்து தற்கெலைக்கு தூண்டியிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு கொடுத்தார்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் தெரித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து ஐ.எஸ் பயங்கரவாதிகள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள், பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிக்காவயன் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில், புகுந்த 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை சிறை பிடித்துள்ளனர். அவர்கள் ஐஎஸ் ஆதரவு பெற்ற பி.ஐ.எஃப்.எஃப். பயங்கரவாதிகள் என பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது.
சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்னார் மீது காலணி வீசியதால் பரபரபப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பிஎச்டி படித்து வந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பர்கள் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக 13-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(வயது19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த உதயகுமார்(வயது21) சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.