வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி:-
தென்மேற்கு பருவ மழை தமிழக பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து மழை இன்று நீடிக்கும். குறிப்பாக வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து குளுமையாக்கியுள்ளது. கோடை காலம் முடிந்த நிலையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. அதேபோல புதுச்சேரியிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 24மணி நேரத்தில் வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. அதேபோல், பூந்தமல்லி,மதுரவாயல், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக பல்வேறு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழையின் அளவு நீலகிரி மாவட்டத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-
ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதி வரை உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் மற்றும் கவர்னருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கவர்னரின் அதிகாரங்களைப் பறிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு என்ற வகையிலான தீர்மானம் புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கவர்னர்ரான கிரண்பேடி முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை கவர்னராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி சமூக வலைதளத்தில் புகார்கள் பதிவிட்டு வந்தார்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பசு, காளை, கன்று, ஒட்டகம் இறைச்சி விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதங்கள் நடைபெற்றன.
அப்பொழுது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு தடை விதித்ததை புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். யார் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. நாடு முழுவதும் 40 சதவீத மக்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
புதுச்சேரியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் மூட புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் மூடப்படும் என அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைப்பெற்று வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி தங்களது அதிகாரங்களை பறிக்க முயல்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்பட சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல் பிரச்சனையால் அரசு பணிகள் முடங்கின. பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் 3 நோயாளிகள் பலி
புதுச்சேரி அரசு மருத்துமனையில் ரத்தசுத்திகரிப்புச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட சுசீலா (77), அம்சா (55), கணேஷ் (54) ஆகிய மூன்று பேருக்கு இன்று சிகிச்சை நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்த சுத்திகரிப்பு நடக்கும் போது மின்சாரம் மருத்துவமனையில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (08-03-17) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது.
இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை புதன்கிழமை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை புதன்கிழமை (08-03-17) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளை 10ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.
இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த புதுச்சேரி அதிமுக தேர்தல் குழு தலைவர் கண்ணன் கட்சியிலிருந்து விலகினார்.
புதுவை முன்னாள் அமைச்சரான கண்ணன் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாக (2009-2015) இருந்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புதுவையில் உள்ள தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஓன்று சேர்ந்து "போராளிகள்" குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த போராளிகள் குழுவின் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும், புதுவைக்கு வரும் பஸ்களும் வரவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.