தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் மோடியை சந்தித்துள்ளார்.
முன்னதாக நேற்று மும்பையில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி சிங்கணாம்பூர் கோவில் ஆகிய இடங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்த பின்னர் இன்று காலை 11 மணி அளவில், பிரதமர் மோடியை சந்தித்தார்.
இன்று டெல்லி செல்லும் தமிழக முன்னாள் முதல் அமைச்சசர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது.
நேற்று மும்பையில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி சிங்கணாம்பூர் கோவில் ஆகிய இடங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். ஏற்கனவே டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. ஆனால் தற்போது அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.
நாளை டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது.
இன்று மகாராஷ்டிராவில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். ஏற்கனவே டில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. ஆனால் தற்போது அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் இன்று மாலை மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணி அளவில், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை 420 என குறிபிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைதலைவர் பதவியேற்பு விழாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
தன்னை 420 என்று டிடிவி தினகரன் கூறியது அவருக்கே பொருந்தும் என தெரிவித்தார், மேலும் அணிகள் இணைப்பு குறித்து கேட்டதற்கு, அ.தி.மு.க. பொது செயலளராக சசிகலா மற்றும் தினகரன் கழக பதவியில் இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொல்லவில்லை எனவும், தொண்டர்கள் விரும்பும் முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பான தகவல்கள் வெளி வந்துகொண்டிருக்கும் இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
அ.தி.மு.க. வின் இந்த பரபரப்பிற்காக சுழலுக்கு என்னால் பொறுபேற்க முடியாது. எதிர்கால இயக்க வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை நான் துணிச்சலுடன் மேற் கொள்வேன். ஆனால் அச்செயல்கள் எப்போது தேவைப்படுமோ அப்போது தானாக நடக்கும். கட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு நடவடிக்கையும் நான் எடுக்க தயங்க வேண்டிய அவசியம் இல்லை.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இரு அணிகளையும் இணைப்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக தினம் ஒரு பரபரப்பு செய்தியினை மக்களுக்கு அளித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை பிரிந்துள்ள அதிமுக-வின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பேசுவதற்காக அதிமுக தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து இருந்தார்.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.
இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்:
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க மாநிலக் கட்சிகளிடம் கேட்டுவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க அனைத்து மாநிலக் கட்சிகளிடம் கேட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்குவதில் மகிழ்ச்சியில்லை என்றும், எனவே தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள் வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், எனது பெயரில் நற்பணி மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக-வுடன் எப்போது கூட்டணி வைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
திடிரென டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடன் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், தமிழக அரசியலிலும் நிலவும் மாற்றம் என தமிழகத்தில் ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டு இருக்கின்றன.
விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கான வாய்ப்பு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் பயணம் தொடங்கினார். நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மர்ம மரணத்தின் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்பதுதான் இந்த தர்மயுத்தத் தின் நோக்கம். அதற்குத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதிமுக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கக்கூடாது.
அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டாலின் தனக்கே உரிய பாணியில் விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்.
இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பதவியில் இருந்த போது ஏன் உத்தரவிடவில்லை என்று மு.க.ஸ்டாலின் எழுப்பியிருந்த கேள்வி குறித்து பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது
ஓ.பன்னீர்செல்வம் மே 5-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார்.
காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு இன்று முதல், 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 'ஒய்' ('Y') பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றுமுதல் 'ஒய்' ('Y') பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.