சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாள், அல்லது ஒரு சில மணி நேரம் சேவைகள் முடங்கினாலும் பெரும் பாதிப்பை அது ஏற்படுத்துகிறது.
பிரபல சமூக ஊடக வலைதளமான டிவிட்டர் சேவையில், இன்று காலை முதலே பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். ட்வீட்களை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. சர்வர் பிரச்சினை காரணமாக உலகளவில் டிவிட்டர் இணையதளம் முடங்கியுள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், ட்விட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் உள்ள சிக்கல்களை சரி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் உங்கள் டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்தலாம்” என தெரிவித்தது.
டுவிட்டர் பாதிப்பு குறித்து தகவல்களுடன் வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில், ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து இதுவரை 81 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலையில் ஏற்பட்ட சிக்கல் சிறிது சரியானது. ஆனால், இன்று மாலையும், ட்விட்டர் முடங்கியதால், பயனர்களால் டிவிட்டரை பயன்படுத்த முடியவில்லை.
ALSO READ | WhatsApp-ன் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வேறு செயலியைப் பயன்படுத்துங்கள்: HC
கடந்த மார்ச் மாதம், இதே போன்று ஒரு நிகழ்வாக, சமூக ஊடக வலைதள சேவைகள் முடங்கின. ஆனால், அப்போது ட்விட்டரில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், வாட்ஸ் (WhatsApp), இண்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் பேஸ்புக் (Facebook) சேவைகள் உலக அளவில் பல இடங்களில் முடங்கியது பயனர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர். மேலும் 25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக அப்போது புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதமும், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ALSO READ | WhatsApp, Facebook, Instagram சேவைகள் முடங்கியதன் காரணம் என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR