ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறப்போரிங்களா? இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

2022ம் ஆண்டின் காலாண்டில் ஐபோன்கள் விற்பனை அதிக வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 1, 2022, 05:54 PM IST
ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறப்போரிங்களா? இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க title=

ஆப்பிள் ஐபோன்கள் வருவாயில் 5% வளர்ச்சியை பெற்றுள்ளது, கடந்த ஆண்டில் இதன் வருவாய் 47.88 பில்லியன் டாலராக இருந்தது தற்போது 50.57 பில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், இந்த காலாண்டில் நிறுவனம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது, மேலும் ஆண்டிராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது.  ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள மூவ் டூ ஐஓஎஸ் என்ற ஆப் ஆனது ஆன்ட்ராய்டு பயனர்களை ஆண்ட்ராய்ட்டிலிருந்து ஐபோனுக்கு எவ்வித தடையுமின்றி டேட்டாக்களை பரிமாற்ற அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | இனி கூகுள் பிளே ஆப்ஸ்கள் இந்த தகவல்களை உங்களுக்கு தெளிவாக காட்டும் !

பொதுவாக ஸ்மார்ட்போனிலிருந்து மாறும்போது தேவையான டேட்டாக்களை புதிய போனுக்கு மாற்றமுடியாமல் போவது வருத்தத்தை அளிக்கிறது.  இதிலுள்ள காண்டாக்ட்டுகள், மீடியா ஃபைல்கள், டாக்குமென்டுகள் மற்றும் ஆப் டேட்டாக்களை போன்றவற்றை சேமிக்க முடியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.  ஆனால் ஆப்பிள் ஆண்ட்ராய்டு பயனர்களை மின்னஞ்சல் கணக்குகள், ஆப் டேட்டாக்கள் மற்றும் மல்டிமீடியா ஃபைல்களை ஐபோனுக்கு மாற்றிக்கொள்ள அனுமதியளிக்கிறது.  அதேசமயம் வாட்சப் சாட் பேக்கப்புகளை ஆண்ட்ராய்டு போனிலிருந்து, ஐபோனுக்கு மாற்ற எவ்வித வழியும் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

எனவே ஐபோனுக்கு மாறும் ஆண்ட்ராய்டு பயனர்கள் அவர்களது வாட்ஸ் அப் சாட்டுகளை பேக்கப் செய்யமுடியாமல் போகும் நிலை ஏற்படும்.  ஐஓஎஸ்-ல் ஜிமெயில், ட்ரைவ், டாக்ஸ், ஷீட்ஸ், காலண்டர், போட்டோஸ் போன்ற கூகுளின் அனைத்து ஆப்ஸ்களும் உள்ளது.  கூகுள் ஆப்ஸ்களான காலண்டர், குரோம் போன்றவை ஐபோனில் ஆப்பிள் காலண்டர், சஃபாரி போன்ற பெயர்களில் கிடைக்கும்.  ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஐபோன் கூகுள் ஆப்ஸ்களை அனுமதிக்கிறது, அதனால் நீங்கள் குரோம், கூகுள் காலண்டர் போன்றவற்றை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஆப்பிள் ஐஓஎஸ் பயன்படுத்த எளிமையானது என்றாலும் இதனை முதலில் பயன்படுத்துபவர்களுக்கு கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும்.  ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு மாறுவது என்பது, ஆண்ட்ராய்டில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறுவதை போன்று எளிமையானது.  இதனை செய்ய ஆப்பிள் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும், செட்அப் பிராஸஸ் போது பழைய போனிலிருந்து டேட்டாக்களை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்கும், அதில் ஆண்ட்ராய்டு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கும்.  பின்னர் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறுவதற்கு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் மாறிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமா? சாம்சங்கின் அசத்தலான புதிய டிவிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News