Ola Electric: ஓலா மின்சார ஸ்கூட்டர்கள், சமீப காலங்களில் மோட்டார் வாகனத் துறையில் மிகுந்த சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அறிமுகம் தொடங்கி விநியோகம் வரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பல வித புதுமுறைகளை கையாண்டு வருகிறது.
தற்போது மற்றொரு பெரிய, புதிய முயற்சியைப் பற்றி நிறுவனம் அறிவித்துள்ளது. ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் திங்களன்று, தனது மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் என்றும் இங்கு 10,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
“தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை! ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். சுமார் 10,000 பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள்/ இது முழுதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்.” என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.
India’s women will bring the EV revolution from India to the world!
When women are equal participants in India’s economic growth, India will lead the world!#JoinTheRevolution pic.twitter.com/65LBJOcykM
— Bhavish Aggarwal (@bhash) September 13, 2021
இந்த நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண்கள் குழுவினர் உள்ள வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஒரு வலைப்பதிவு இடுகையில் அகர்வால், இந்த வாரம் நிறுவனம் முதல் தொகுப்பை வரவேற்றதாகவும், முழுமையான செயல்பாடுகள் தொடங்கியவுடன், Futurefactory 10,000 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தும் என்றும் கூறினார். உலக அளவில், பெண்கள் மட்டும் பணிபுரியும் உலகின் முதல் தொழிற்சாலையாகயாகவும், முதல் வாகன உற்பத்தி ஆலையாகவும் இது இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெண்களையும் உள்ளடக்கிய தொழிற்சாலையை உருவாக்க ஓலா நிறுவனம் எடுக்கவுள்ள பல முயற்சிகளில் இது முதல் முயற்சியாகும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்க நிறுவனம் முழு முனைப்புடன் உள்ளது.
Aatmanirbhar Bharat requires Aatmanirbhar women!
Proud to share that the Ola Futurefactory will be run ENTIRELY by women, 10,000+ at full scale! It’ll be the largest all-women factory in the world!!
Met our first batch, inspiring to see their passion!https://t.co/ukO7aYI5Hh pic.twitter.com/7WSNmflKsd
— Bhavish Aggarwal (@bhash) September 13, 2021
ALSO READ: Ola Electric Scooter விற்பனையில் சிக்கல்: இந்த தேதியில் விற்பனை துவங்கும்
முக்கிய உற்பத்தித் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவனம் கணிசமாக முதலீடு செய்துள்ளதாகவும், ஓலா (Ola) பியூச்சர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்தின் முழு உற்பத்திக்கும் பெண்களே பொறுப்பாவார்கள் என்றும் அகர்வால் கூறினார்.
உற்பத்தியில், பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாக, 12 சதவிகிதமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்தியா உலகின் உற்பத்தி மையமாக இருக்க, நாம் நமது பெண் தொழிலாளர்களுக்கான மேம்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்" என்று அகர்வால் மேலும் கூறினார்.
2,400 கோடீ ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தனது முதல் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கப்போவதாக ஓலா அறிவித்தது.
உற்பத்தி அதிகரிக்கும்
உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஓலா நிறுவனம், ஆரம்பத்தில் 10 லட்சம் வருடாந்திர உற்பத்தித் திறனுடன் தொடங்கி, பின்னர் முதல் கட்டத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப, 20 லட்சம் வரை எடுத்துச் செல்வதாகக் கூறியிருந்தது.
முழுமையான செயல்பாடுகள் நிறைவடைந்ததும், ஓலா எலக்ட்ரிக், தனது தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் திறனைக் கொண்டிருக்கும் என்று கூறியது. "இது உலகின் மொத்த இரு சக்கர வாகன உற்பத்தியில் 15 சதவிகிதமாக இருக்கும்" என்று நிறுவனம் தெரிவித்தது.
ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் (Ola Electric Scooter) அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டாலும், ரூ .99,999 என்ற ஆரம்ப விலையில், ஓலா எலக்ட்ரிக் ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் முன்பதிவுகளைத் தொடங்கியது.
ALSO READ: Ola Cars: குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க ஓலாவின் புதிய தளம் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR