WhatsApp மெஸ்சேஜ் அனுப்புகையில் எழுத்துருக்களை மாற்றுவது எப்படி..!!

வாட்ஸ்அப் என்னும் இன்ஸ்டெண்ட் மெஸ்சேஜிங் பிளாட்பார்ம், அதாவது உடனடியாக  மெஸேஜ் அனுப்பும் தளம், இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு தளம்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2021, 11:33 AM IST
  • கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து (Google play store) கீபோர்ட் செயலி (keyboard app)ஒன்றை பதிவிறக்க வேண்டும்.
  • தேவையில்லாத வகையில் எந்த விதமான அனுமதிகளும் உங்களிடமிருந்து இங்கே கேட்கப்படுவதில்லை.
  • நீங்கள் தொலைபேசியைத் அன்லாக் செய்து அனுமதி அளிக்கும் வரை இந்த செயலி செயல்படாது.
WhatsApp மெஸ்சேஜ் அனுப்புகையில் எழுத்துருக்களை மாற்றுவது எப்படி..!!  title=

வாட்ஸ்அப் (WhatsApp) என்னும் இன்ஸ்டெண்ட் மெஸ்சேஜிங் ப்ளாட்பார்ம், அதாவது உடனடியாக  மெஸேஜ் அனுப்பும் தளம், இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு தளம்.  இதில் மெஸ்சேஜ் அனுப்பும் போது, சாதாரண எழுத்துக்களில் டைப் செய்து அனுப்புவதுடன் கூடவே பல ஸ்டைலான எழுத்துருக்களில் (stylish fonts) வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நீங்களும் அவ்வாறு அனுப்ப விரும்பினால், வாட்ஸ்அப்பில்  (WhatsAPP) சேட் செய்யும் போது புதிய ஸ்டைலான எழுத்துருவைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு நீங்கள் பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. இதற்கு, நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து (Google play store) கீபோர்ட் செயலி (keyboard app)ஒன்றை பதிவிறக்க வேண்டும். அதன் செய்முறையை அறிந்து கொள்வோம்.

- Fonts செயலிகள் (எழுத்துருக்கள் - Emojis & Fonts Keyboard) (https://play.google.com/store/apps/details?id=com.fontskeyboard.fonts&hl ...) என்ற இந்த இணைப்பில் இருந்து பயனர்கள் இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். 

- இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், செயலி முற்றிலும் விளம்பரமில்லாதது. 

- இது தவிர, தேவையில்லாத வகையில் எந்த விதமான அனுமதிகளும் உங்களிடமிருந்து இங்கே கேட்கப்படுவதில்லை. 

- பயனர்கள் இந்த பயன்பாட்டை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

ALSO READ | Windows 11: விண்டோஸ் 10, 8.1 பயனர்களுக்கு இலவசமாக கிடைக்குமா.. உண்மை நிலை என்ன

செயலியை டவுன்லோட் செய்த பிறகு, கீபோர்டை செயல்படுத்த உங்கள் அனுமதியைக் கேட்கிறது. அதில் Enable Font keyboard என்பதை க்ளிக் செய்யவும். அனுமதி அளித்த பிறகு, இங்கே நீங்கள் கீ போர்ட் செட்டிங்கை செய்ய வேண்டும். இதற்காக, நீங்கள் Toggle என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், பின்னர் default keyboard என்பதற்கு பதிலாக Font keyboard என்பதை தேர்வு செய்யவும்.

இதற்குப் பிறகு, இந்த உள்ளீட்டு முறையுடன் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கக்கூடிய pop-up செய்தியை இங்கே காண்பீர்கள், நீங்கள் ஒப்புக்கொண்டால், சரி என்பதைக் கிளிக் செய்க. இதற்குப் பிறகு இது மற்றொரு pop-up செய்தியைக் காட்டுகிறது, நீங்கள் தொலைபேசியில் ஸ்கிரீன் லாக் பயன்படுத்தினால்,  நீங்கள் தொலைபேசியைத் அன்லாக் செய்து அனுமதி அளிக்கும் வரை இந்த செயலி செயல்படாது. 

ALSO READ | Google Updates: கூகுள் ஏன் தேடல் வழிமுறைகளைப் புதுப்பிக்கிறது?  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News