iPhone 15,15 Pro மற்றும் 15 Pro Max: வடிவமைப்பு, விலை முழு விவரங்கள் இதோ

iPhone 15 Series Launch Date: ஐபோன் 15 தொடரின் கீழ், நிறுவனம் ஐபோன் 15, 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மூன்று போன்களை அறிமுகப்படுத்தும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2023, 09:59 PM IST
  • ஐபோன் 15 தொடர் ரூ.80,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆகக்கூடும்.
  • மேலும் அதன் ப்ரோ மாடலின் விலை ரூ.1,30,000 வரை இருக்கலாம்.
  • புதிய தொடரை நிறுவனம் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
iPhone 15,15 Pro மற்றும் 15 Pro Max: வடிவமைப்பு, விலை முழு விவரங்கள் இதோ title=

iPhone 15 Series Launch Date: ஐபோன் பிரியர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 -க்காக காத்திருக்கின்றனர். நிறுவனம் செப்டம்பரில் புதிய ஐபோனை அறிமுகப்படுத்தக்கூடும். ஐபோன் 15 சீரிஸின் கீழ், நிறுவனம் ஐபோன் 15, 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மூன்று போன்களை அறிமுகப்படுத்தும். மூன்று ஐபோன்களின் வடிவமைப்பு மற்றும் விலை பற்றிய அப்டேட் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விலை விவரங்கள் 

ஐபோன் 15 தொடர் ரூ.80,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆகக்கூடும். மேலும் அதன் ப்ரோ மாடலின் விலை ரூ.1,30,000 வரை இருக்கலாம். நிறுவனம் ஐபோன் 14  -ஐ செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே இந்த ஆண்டும் அந்த மாதத்திலேயே புதிய தொடரையும் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

ஐபோன் 15 -இன் அனைத்து மாடல்களும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும். iPhone 15 Pro மற்றும் 15 Pro Max இல் பிசிக்கல் பொத்தான்கள் மட்டுமே கிடைக்கும். தயாரிப்பு பிரச்சினை காரணமாக, நிறுவனம் அதில் ஹாப்டிக் பட்டன்களை வழங்காது. உண்மையில், ஹாப்டிக் பொத்தான்களுக்கு, ஃபோனில் மூன்று புதிய ஹாப்டிக் என்ஜின்கள் தேவைப்பட்டன, இது தொலைபேசியின் உற்பத்தி மற்றும் நிறுவலை தாமதப்படுத்தக்கூடும். ஆகையால் நிறுவனம் பேஸ் மாடலில் மட்டுமே ஹாப்டிக் பட்டன்களை வழங்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

பழைய ம்யூட் ஸ்விட்ச் பட்டனை மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற தனிப்பயனாக்கக்கூடிய செயல் பொத்தான்களை போனில் காணலாம் என்றும் லீக்ஸில் கூறப்பட்டுள்ளது. இது ப்ரோ மாடலில் மட்டுமே காணப்படும். மேலும் ஐபோன் 15 இன் வழக்கமான பதிப்பில் பழைய மியூட் சுவிட்ச் அம்சம் மட்டுமே இருக்கும். இது தவிர, ஃபிளாக்ஷிப் போனின் பின்புற பேனலில் பெரிய கேமரா பம்பையும் காணலாம். நிறுவனம் ஐபோன் 15 தொடரை மெல்லிய பெசல்களுடன் வழங்கக்கூடும். இதனால் பயனர்கள் தொலைபேசியில் நல்ல பார்வை அனுபவத்தைப் (வியூயிங் எக்ஸ்பீரியன்ஸ்) பெற முடியும். மேலும், 15 தொடர்களில் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக, நிறுவனம் டைப்-சி சார்ஜரை வழங்கும்.

மேலும் படிக்க | அறிமுகம் ஆனது Samsung Galaxy F54: விலை, பிற விவரங்கள் இதோ

விவரக்குறிப்புகள்

- ஐபோன் 15 - ஏ-16 பயோனிக் சிப்செட், 48எம்பி கேமரா
- ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் - ஏ17 பயோனிக் சிப்செட் கிடைக்கும். மேலும், 5 முதல் 6x ஆப்டிகல் ஜூம் இயக்கப்பட்ட பெரிஸ்கோப் லென்ஸையும் அவற்றில் காணலாம்.

இந்த போன்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்

ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் OnePlus Nord, iQOO Neo 7 Pro, Infinix Note 30, Realme 11 Pro, Realme 11 Pro +, Galaxy F54, oppo Reno 10 சீரிஸ் ஆகியவை அடங்கும்.

ஐபோன் 14 விலைக் குறைப்பு: 

ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் சந்தைக்கு வர இன்னும் சிறிது காலம் உள்ளது. நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் ஒரு பெரிய நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் தொடர்களை அறிமுகப்படுத்துகிறது. புதிய சீரிஸ் வந்தவுடன் பழைய சீரிஸ் ஐபோனின் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் 15 தொடர்கள் வருவதற்கு முன்பே, ஐபோன் 14 இன் விலைகள் குறைந்துள்ளன. 

மேலும் படிக்க | KFON வெளியிட்ட அதிரடி மலிவு விலை திட்டம்: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி.. மாதம் ரூ.299

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News