சீனாவை மையமாக கொண்டு இயங்கும் பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Huawei தனது புதுவரவான Mate 20 Pro-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!
இணைய வினியோக இயந்திர உற்பத்தியில் பிரசித்திப்பெற்ற Huawei நிறுவனம் தற்போது Mate 20 Pro-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலையானது ₹ 69,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த Huawei Mate 20 Pro, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Huawei Mate 20 Pro ஆனது இந்நிறுவனத்தின் முதல் 5G-ready 7nm Kirin 980 chipset தொழில்நுட்ப போன் ஆகும். அதே வேலையில் இந்தியாவில் Mate வரிசையில் Huawei வெளியிடும் முதல் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Huawei Mate 20 Pro குறித்து சில குறிப்புகள்...
- மூன்று பின் கேமிரா (40MP wide-angle lens, 20MP ultra-wide angle lens, 8MP telephoto lens)
- ஒரு முன் கேமிரா (24MP)
- 6GB RAM மற்றும் 128GB உள் நினைவகம்.
- 4200mAh பேட்டரி.
- Android 9.0 Pie இயங்குதளம்.
- எமரால்டு பச்சை மற்றும் ட்விலைட் ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகிறது.