Airtel vs Jio: இரு திட்டங்களிலும் கிடைக்கும் அசத்தல் நன்மைகள், எந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்தது

Best Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2022, 01:14 PM IST
  • ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
  • பயனர்களுக்கு மலிவு விலையிலான திட்டங்கள் மட்டுமின்றி நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களும் தேவை.
  • சந்தையில் உள்ள இரண்டு முக்கிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ தினசரி 1.5 ஜிபி டேட்டா திட்டங்களை வழங்குகின்றன.
Airtel vs Jio: இரு திட்டங்களிலும் கிடைக்கும் அசத்தல் நன்மைகள், எந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்தது title=

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. பயனர்களுக்கு மலிவு விலையிலான திட்டங்கள் மட்டுமின்றி நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களும் தேவை. 

மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி பேசுகையில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வழங்கப்படும் திட்டம் முதலில் வருகிறது. சந்தையில் உள்ள இரண்டு முக்கிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ தினசரி 1.5 ஜிபி டேட்டா திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றில் வழங்கப்படும் பலன்கள் மற்றும் சலுகைகள் வேறுபடுகின்றன. இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்று இந்த பதிவில் காணலாம். 

ஜியோ 56 நாட்கள் திட்டம்

ஜியோ ஒரு மிட்-டர்ம் 1.5ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. பயனர்கள் ரூ.479 விலையில் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பெறலாம். இதில் 56 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. செல்லுபடியாகும் காலத்திற்கு இதில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி தரவு வழங்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | 3GB உடன் வரம்பற்ற டேட்டா வழங்கும் வோடாஃபோன்: விலை என்ன 

இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகியவை கிடைக்கின்றன. ஜியோ பயன்பாடுகளில் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் இன்னும் சில அடங்கும்.

ஏர்டெல் 56 நாட்கள் திட்டம்

மறுபுறம், ஏர்டெல்லின் மிட்-டர்ம் திட்டம் விலை அடிப்படையில் ஜியோவைப் போலவே உள்ளது. ஏர்டெல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.479 ஆகும். இது 56 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. 

இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாலைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மொபைல் பதிப்பான அமேசான் ப்ரைம் வீடியோ இலவச டிரயல் மற்றும் வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன. 

ஜியோவின் திட்டம் சிறப்பானது: காரணம் என்ன?

இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களும் ஒரே விலையில் இருப்பதாகத் தோன்றினாலும், ஜியோவின் 1.5 ஜிபி திட்டம் அதன் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையின் கீழ் வருவதால், இதில் பல வேறுபாடுகள் உள்ளன. இது பயனர்களுக்கு திட்டத்தில் 20% தள்ளுபடியை வழங்குகிறது. ஆகையால், இந்த காரணத்தால், ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டம் உண்மையில் ஏர்டெல்லை விட சற்று மலிவானதாக கருதப்படுகின்றது.

மேலும் படிக்க | Airtel prepaid plans: ஏர்டெல்லின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News