தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தனியாருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு தங்கி வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அப்பகுதியில் சிறுகுறு தொழில் செய்து வந்தாலும் சரியான வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லோலப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வாடகை வீடுகளில் இருந்து அன்றாட தேவைகளுக்காக கிடைத்த வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் அவர்களை, வீட்டின் உரிமையாளர்கள் அங்கிருந்து காலி செய்யுமாறு வர்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள், தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பசுமை வீடுகள் அமைத்துத்தர வேண்டும் எனவும் படிப்புக்கு தகுந்தார்போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர வலியுறுத்தியும் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கோரிக்கைகளை முன்வைத்து ஆட்சியர் அலுவலக கட்டிட வளாகத்திற்கு செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய இவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல் & கடந்து வந்த பாதை!
ஆனால், இன்று வரை இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் இருந்து எவ்வித பதிலும் வராத நிலையில் திருநங்கைகள் மீண்டும் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். அப்போது, அவர்களிடம் பேலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தங்களின் கோரிக்கைகளை இதுவரை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என அவர்கள் உறுதியாக நின்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் எனவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட திருநங்கைகள், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR