முதலமைச்சர் கோப்பை 2023: தொடரை தொடங்கிவைக்கும் உதயநிதி... ஏற்பாடுகள் என்னென்ன?

Chief Minister Trophy 2023: கபடி, சிலம்பம் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் கொண்ட முதலமைச்சர் கோப்பை தொடர் சென்னையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2023, 10:16 PM IST
  • 27 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட விரர்‌ மற்றும்‌ விராங்கனைகள்‌ மாநில அளவில் தேர்வு.
  • அவர்களின் தங்குமிடம், உணவு, பயண ஏற்பாடுகளை அரசு ஏற்கிறது.
  • ஜூன் 30ஆம் தேதி தொடக்க விழா நடைபெறுகிறது.
முதலமைச்சர் கோப்பை 2023: தொடரை தொடங்கிவைக்கும் உதயநிதி... ஏற்பாடுகள் என்னென்ன? title=

Chief Minister Trophy 2023: 2023 முதலமைச்சர்‌ கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ தொடக்க விழா வரும் ஜுன்‌ மாதம்‌ 30ஆம்‌ தேதி அன்று சென்னை நேரு உள்‌ விளையாட்டு அரங்கத்தில்‌ நடைபெறுகிறது. இந்த விழாவினை இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ தொடங்கிவைக்கிறார்கள்‌.

15 விளையாட்டுகள்

44ஆவது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது, தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின், முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்திருந்தார். 

அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌, கடந்த பிப்ரவரி மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌‌ மாதம்‌ வரை நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ 3,76,000 மேற்பட்ட விரர்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ கலந்து கொண்டனர்‌. மாவட்ட
அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 27 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட விரர்‌ மற்றும்‌ விராங்கனைகள்‌ மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்‌.

மேலும் படிக்க | கணவன் சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு... உயர் நீதிமன்றம் தந்த புது விளக்கம்!

17 இடங்களில்...

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ சார்பில்‌ சென்னையில்‌ 17 இடங்களில்‌ ஜுலை 1ஆம்‌ தேதி முதல்‌ ஜுலை மாதம்‌ 25ஆம் தேதி வரை முதலமைச்சர்‌ கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடைபெற உள்ளது.

27 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள்

இந்த போட்டிகளில்‌ பங்கேற்கவுள்ள 27,000க்கும்‌ மேற்பட்ட வீரர்‌-வீராங்கனைகள்‌, பயிற்றுநர்கள்‌, நடுவர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ தேசிய மாணவர்‌ படை தன்னார்வலர்கள்‌ அனைவருக்கும்‌ போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும்‌ தங்குவதற்கு வசதியாக தனியார்‌ விடுதிகள்‌ மற்றும்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை ஆகியவைகளில்‌ 2000க்கும்‌ மேற்பட்ட அறைகள்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. 

ஏற்பாடுகள் தீவிரம்

மேலும்‌, மேலக்கோட்டையூரில்‌ உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டு பல்கலைக்கழகத்தில்‌ உள்ள மாணவ மாணவியர்‌ விடுதிகளில்‌ தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ போட்டி நடைபெறும்‌ அனைத்து நாட்களிலும்‌ மூன்று வேளை உணவு மற்றும்‌ சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

போட்டி நடைபெறும்‌ இடங்களில்‌ காவல்துறை மூலம்‌ உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. வீரர்‌ விராங்கனைகள்‌ போட்டி நடைபெறும்‌ இடங்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, அனைத்து இடங்களிலும்‌ மருத்துவ வசதி ஏற்பாடுகள்‌ சிறந்த முறையில்‌ மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும்‌ எடுக்கப்பட்டுள்ளது. 

போட்டிகளை சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டு பல்கலைக்கழகம்‌, மாநகர போக்குவரத்து கழகம்‌, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம்‌ மற்றும்‌ பொது சுகாதாரத்துறை மற்றும்‌ காவல்‌ துறை ஆகிய துறைகளுடன்‌ இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஹெல்மெட் போட்டால் கிடைக்கும் ஜாக்பாட்... போலீசாரின் சர்ப்ரைஸ் கிப்ட் - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News