தினசரி 50 KM நடைபயணம்; கடும் வெப்பத்தில் வாழ்க்கையை தேடும் விவசாயிகள்...

குறு நிலங்களில் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் இந்த முழு அடைப்பு காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Apr 19, 2020, 11:42 AM IST
தினசரி 50 KM நடைபயணம்; கடும் வெப்பத்தில் வாழ்க்கையை தேடும் விவசாயிகள்... title=

குறு நிலங்களில் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் இந்த முழு அடைப்பு காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகளை, மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகளை அமைத்து விற்பது கடினமாகியுள்ளது. இதன் காரணமாக பல விற்பனையாளர்களாக மாறிய விவசாயிகள் சந்தையை அடைய ஒவ்வொரு நாளும் சுமார் 25km தூரம் நடந்து செல்வதாகக் கூறுகிறார்கள். காய்கறிகளையும் கீரைகளையும் தங்கள் தலையில் சமன் செய்து விற்பனையாளர்களாக மாறிய விவசாயிகள் விற்று வருவதாகவும் தெரிகிறது.

READ | இளைஞர்களே... நோயை வாங்கி, வாழ்க்கையை தொலைக்காதீர் -இராமதாசு...

இந்த சூழ்நிலையில் பெரும்பாலும் பெண்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் வெப்பத்தில் நடந்து செல்வதைக் காணலாம். என்றபோதிலும் அவர்களது உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைக்கும் என்பது வேதனைக்குறிய விஷயம். 

“மற்ற மூன்று பேருடன் சேர்ந்து, நான் எங்கள் கிராமத்தில் கீரைகளை வளர்த்து காந்தி சந்தையில் விற்கிறேன். முழு அடைப்பால், பொது போக்குவரத்து இல்லை, நாங்கள் நகரத்திற்கு வர முடியவில்லை. எங்கள் கிராமத்தில் அவற்றை விற்க முயற்சித்தோம், ஆனால் எடுப்பவர்கள் யாரும் இல்லை. கொஞ்சம் வியாபாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் நகரத்திற்கு நடந்தோம்,” என்று மனச்சனல்லூரில் உள்ள கொனலை நகரைச் சேர்ந்த விற்பனையாளர் மரியம்மா கனத்த குரலோடு கூறுகிறார். 

நாங்கள் காய்கறிகளை மாலை வேளையில் காந்தி சந்தையிலும் விற்கிறோம். வெப்பம் தணிந்தவுடன் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்கிறோம், என்று மரியம்மா மேலும் கூறினார்.

READ | 550 தனிமைப்படுத்தல் படுக்கைகளுடன் உருமாற்றப்பட்ட சென்னை வர்த்தக வளாகம்...

இந்த குழு தனது 23 கி.மீ நடைப்பயணத்தை அதிகாலை நேரத்தில் தொடங்குகிறது, இதனால் வணிகத்திற்கு அனுமதி கிடைக்கும் போது அவர்கள் நகரத்திற்கு வருவார்கள். 

இதனிடையே முசிரியைச் சேர்ந்த விற்பனையாளர் ராஜேந்திரன், இந்த குழுவிற்கு முறையான போக்குவரத்து ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் L.சிவராசு பிரச்சினைகள் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், விற்பனையாளர்களை தங்கள் கிராமங்களுக்கு அருகிலுள்ள நகரங்களில் கடை அமைக்குமாறு அறிவுறுத்தியதாகவுத் தெரிகிறது.

Trending News