சிவகங்கையில் குடும்ப தகராறி கணவன் மனைவியை சராமாரியாக வெட்டியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில் கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை கல்லூரி சாலை இந்திரா 3 வது தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல். இவரது மனைவி நம்பீஸ்வரி மாற்றுத்திறனாளியாவார். இவர்களுக்கு திவ்யஸ்ரீ என்கிற மகளும் வேல்பாண்டி என்கிற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தந்தை சக்திவேல் அடிக்கடி மது அருந்திவந்து மனைவி நம்பீஸ்வரியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் தகராறில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை அதிகரித்ததில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி நம்பீஸ்வரியை சக்திவேல் சராமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த நம்பீஸ்வரி வீட்டில் இருந்து கூச்சலிட்டதுடன் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் படிக்க | 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி -Viral News
பின்பு கணவன் சக்திவேல் அங்கிருந்து நகர் காவல் நிலையம் சென்று சரனடைந்தார். படுகாயமடைந்த நம்பீஸ்வரிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் படிக்க | அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை திருடிய டிப்டாப் ஆசாமி - சிசிடிவி வீடியோ !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ