புதிய ரேஷன் கார்டுக்கு ரூ.500 லஞ்சம்! நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள்!

புதிய ரேஷன் காரடுக்கு ரூபாய் 500 லஞ்சம் கேட்கும் வட்ட வழங்கல் அதிகாரியை தட்டிக் கேட்டவரிடம் அலட்சியமாக பதில் கூறும் அதிகாரியின் வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2021, 12:30 PM IST
புதிய ரேஷன் கார்டுக்கு ரூ.500 லஞ்சம்! நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள்! title=

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய அரசு பதவி ஏற்றதும் மீண்டும் புதிய ரேஷன்கார்டு வழங்கும் பணி தொடங்கியது. மேலும் இந்த கொரோனா நிவாரணத் தொகையாக இந்த மாதமும், அடுத்த மாதமும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். 

அதன்படி புதிய ரேஷன் கார்டுகளை (New Ration Card) வாங்குவதற்கு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் (Dindigul) மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக குடும்ப அட்டை பதிவு செய்து ரேஷன் கார்டு பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் ரூபாய் 500 லஞ்சமாகதாலுகா வட்ட வழங்கல் அதிகாரி சரவணன் வாங்குவதாக கூறப்பட்டது.

ALSO READ | புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி

இந்த செய்தியை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலு என்பவர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை நேரில் சந்தித்து புதிய ரேஷன் கார்டு (Ration Card) வாங்க வரும் நபர்களிடம் ஏன் 500 ரூபாய் பணம் வாங்குகறீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சரவணன், மாவட்ட அதிகாரிகளுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளதால் லஞ்சம் வாங்குவதாகவும், மாவட்ட அதிகாரிகளுக்கு செலவு செய்ய வேண்டி உள்ளது என திமிராக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு புகார் வந்தது. இதன் அடிபடையில் வட்ட வழங்கல் அலுவலர் மீதான புகாரை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட வழங்கல் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சரவணனை கலெக்டர் விஜயலட்சுமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News