வதந்தி வேண்டாம்!! சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா ஏற்படும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் அறிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 17, 2020, 04:01 PM IST
வதந்தி வேண்டாம்!! சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா ஏற்படும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு title=

தமிழ்நாடு: கோழி மாமிசம் மற்றும் அது சம்பந்தமான பொருட்களை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரப்பட்டு வருகின்றன. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்று தெரியாமல் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதால், பலர் சிக்கன் மற்றும் முட்டை போன்ற பொருட்களை வாங்குவதை தவித்தனர். இதனால் இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் முட்டைக்கு பெயர் போன நாமக்கல் மாவட்டத்தின் கோடி கணக்கில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒருபக்கம் விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கோழிகளின் தீவனமான மக்காச் சோளத்தின் விலை கடும் சரிந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரபப்படும் வதந்தியால், பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதுக்குறித்து இன்று பேசிய தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்தி காரணமாக, முட்டை மற்றும் கறிக்கோழி விலைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. தவறான கருத்துக்களை பரப்பியவர்களை அரசு கைது செய்திருப்பது பெரும் மகிச்சி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என்றார்.

மேலும் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Trending News