தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் ஒரு குடோனில் முறைகேடாக சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 28,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. டீசல் டேங்க் லாரி, குட்டி யானை வாகனம், ஆகியவற்றையும் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி நகரில் விசைப்படகுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீசார் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
ALSO READ | ஆன்லைன் தேர்வு நடத்த கோரி போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்கு!
அப்போது தூத்துக்குடி புறவழிச்சாலையில் மடத்தூர் அருகே ஒரு குடோனில் டீசல் டேங்கர் லாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து அந்த டேங்கர் டீசல் லாரியை உணவு கடத்தல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து டேங்கர் லாரி இருந்த பல லட்சம் மதிப்பிலான 28 ஆயிரம் லிட்டர் டீசல், டேங்கர்லாரி, மற்றும் குட்டியானை வாகனங்களையும் போலீசார் (Police Department) பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டீசல் கொண்டுவரப்பட்டு தனியார் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு தெரியவந்துள்ளது.
ALSO READ | கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது
மேலும் இந்த டீசலில் கலப்படம் எதும் கலந்து உள்ளதா என்பது குறித்து ஆய்வு அனுப்பப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் கள்ளச்சந்தையில் டீசல் விற்பனை செய்து வரும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | Gravel Soil: கிராவல் மண் கடத்தல் விவகாரத்தில் OPS மீது வழக்கு பாயுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR