ஜெயலலிதாவின் பிறந்தநாளில், “தலைவி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’  படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத்  (Kangana Ranaut)  முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2021, 09:03 PM IST
  • ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
  • பல மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை விஷால் விட்டல் செய்துள்ளார்.
  • இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) குமார் இணைந்து இசையமைத்துள்ளனர்
ஜெயலலிதாவின் பிறந்தநாளில், “தலைவி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு title=

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. 
நடிகையாக தங்கத் தாரகையாக வெள்ளித் திரையில் உலா வந்துக் கொண்டிருக்கும்போதே, 1981ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து, கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், மாநில முதலமைச்சர் என வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சித்திரம் தான், மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும்  ‘தலைவி’ திரைப்படம். 

ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, தலைவி பட ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம்,  ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்று முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கங்கனா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

 

 

 
 
 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

 

இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்தின் முதலமைச்சராக, கம்பீரமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதாவை திரையில் காணும் ஆசை அனைவருக்கும் உள்ளது என்பது அவற்றில் ஒரு முக்கிய காரணமாகும்.

ALSO READ | J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’  படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத்  (Kangana Ranaut)  முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார். 

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். பல மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை விஷால் விட்டல் செய்துள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) குமார் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ALSO READ | MGR நினைவு நாளில் வைரலாகும் அரவிந்த் சாமியின் MGR Look ...!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News