கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டில் சோதனை தொடங்கியுள்ளது. இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி வருமான வரி சோதனை தொடங்கி, 8 நாட்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜீன் 23ஆம் தேதி இரண்டாவது கட்டமாக இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது மூன்றாவது கட்டமாக கரூரில் வருமான வரி அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். கொங்கு மெஸ் மணி வீடு, கோயம்புத்தூர் ரோடு, 2 சக்தி ஹோட்டல், பைனான்ஸ், ராம விலாஸ் வீவிங் பேக்டரி, சின்ன ஆண்டாள் கோவில் ரோடு உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சோதனை.
மேலும் படிக்க | சத்ய பிரியா கொலை வழக்கு: கொலைகாரனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்த நீதிமன்றம்..!
மேலும், கடந்த முறை கரூர் வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில், 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன், முன் ஜாமின் ரத்து செய்யக்கோரிய வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த், ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த மே 25ஆம் தேதி வருமான வரி முறைகேடு செய்ததாக கரூரைச் சேர்ந்த அசோக்குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தோம். சோதனை நடைபெற்ற இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். நாங்கள் சோதனை செய்த உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம். வெளியே கூடி இருந்த நபர்கள் மோசமான வார்த்தைகளில் வருமான வரி துறையினரை பேசினர். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கூட்டம், வருமானவரி துறையினரான எங்களை தாக்கியதோடு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
கூட்டம் அதிகரிக்கவே, அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த இடங்களை விட்டு வெளியேறினோம். மறுநாள் சிஆர்பிஎஃப் வீரர்களின் உதவியுடன் சோதனையை தொடர்ந்தோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், தலைமறைவாக இருந்தவர்களுக்கு கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளை பணி செய்து விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் கைது செய்யப்பட்ட 19 நபர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதனை எடுத்து வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் படிக்க | வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது! ஆர்.பி. உதயகுமார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ