பிரியாணிக்காக அமைச்சர் பேச்சை புறக்கணித்து சாப்பிட ஒடிய திமுக தொண்டர்கள்!

அமைச்சர் பேச்சு முக்கியமா ? சாப்பாடு முக்கியமா ? பிரியாணிக்காக அமைச்சர் மூர்த்தி பேசும்போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்கள்.  

Written by - RK Spark | Last Updated : Aug 7, 2023, 07:51 AM IST
  • அமைச்சர் பேச்சு முக்கியமா? சாப்பாடு முக்கியமா?
  • பிரியாணிக்காக பாதியில் ஓடிய தொண்டர்கள்.
  • அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே எழுந்து சென்றனர்.
பிரியாணிக்காக அமைச்சர் பேச்சை புறக்கணித்து சாப்பிட ஒடிய திமுக தொண்டர்கள்! title=

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.  இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என மேடையில் அமைச்சர் பி.மூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே பிரியாணி ரெடியாகியதால் அமைச்சர் மூர்த்தியின் பேச்சை கேட்காமல் கீழ்தளத்தில் பிரியாணிக்காக எழுந்து ஒடிய தொண்டர்களால் பரபரப்பானது.  இதில் உச்சகட்டமாக ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு பிரியாணிக்காக ஒடிய தொண்டர்கள் மட்டன் பிரியாணியை ஒரு பிடித்தவாறே, அமைச்சர் பேச்சு முக்கியமில்லை பிரியாணி தான் முக்கியம் என்று அடித்து ஒடிய சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

dmk

மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!

மேலும், மற்றொரு இடத்தில் வனத்துறையில் பணியாற்றும் போது கிடைக்கிற மன நிம்மதியும் ஆனந்தமும் வேற எந்த துறையிலும் கிடைக்காது என நினைக்கிறேன் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.  2022ஆம் ஆண்டு இந்திய வன பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஷங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நடைப்பெற்றது, இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு வனத்துறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மதிவேந்தன் "வனத்துறை இளைஞர்களுக்கு மிகவும் சவாலான துறை. இதில், இல்லாத சிக்கல்களே கிடையாது.என கூறினார்.மேலும் சுற்றுலாத் துறையின் அமைச்சராக இருந்தபோது போது சற்று நிம்மதியாக இருந்தேன்  அதனால் பல புதிய திட்டங்களை சுற்றுலாத் துறையில் கொண்டு வந்தோம். 

பிறகு நான் வனத்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, நான் கல்லூரிகளில் எப்படி படித்துக் கொண்டிருந்தேனோ அதேபோல் வனத்துறையை பற்றி படிக்க ஆரம்பித்து விட்டேன் என்றும் வனத்துறைக்கு உண்டான தனித்துவங்கள் மற்றும் அதற்குண்டான அறிவியல் வார்த்தைகளை கற்றுக்கொண்டு கடந்த 7 மாதங்களாக திறம்பட செயலாற்றி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காடுகளுக்கு சென்று அதனை ஆராயும் போது பல புது விதமான சுவாரசியமான தகவல்கள் பெற முடிகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் பாரினுக்கு கூட செல்லலாம் ஆனால் பாரஸ்ட்க்குள் செல்ல முடியாது ஏனென்றால் அவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் பணியாற்றும் போது கிடைக்கிற மன நிம்மதியும் ஆனந்தமும் வேற எந்த துறையிலும் கிடைக்காது என்று நினைக்கிறேன் என கூறினார்.

மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News