இயக்குநர் மகேந்திரன் காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Last Updated : Apr 2, 2019, 11:21 AM IST
இயக்குநர் மகேந்திரன் காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்! title=

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் திரு மகேந்திரன்.

எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு!

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! 

 

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News