இளைஞர்களுக்காகவே முதல்வர் வெளிநாடு செல்கிறார் - எம்பி ஆ ராசா!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரவே முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்று நீலகிரி எம்பி ஆ ராசா மேட்டுப்பாளையத்தில் பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2024, 08:07 PM IST
  • வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவே நோக்கம்.
  • முதல்வர் அதுக்காகவே வெளிநாட்டு பயணம்.
  • எம்பி ஆ. ராசா கோவையில் பேச்சு.
இளைஞர்களுக்காகவே முதல்வர் வெளிநாடு செல்கிறார் - எம்பி ஆ ராசா! title=

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஓம்சக்தி நகர், குமரன் குன்று,எஸ்.ஆர்.எஸ் நகர், வெள்ளி குப்பம் பாளையம், பள்ளேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை, காங்கீரீட் சாலை, மழை நீர் வடிகால் வசதி என ஒரு கோடியே 8லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளேபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகி எம்.பியும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு புதிய பணிகளை துவக்கியும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கியும் வைத்தார்.

மேலும் படிக்க | உதயநிதி டி ஷர்ட் அணிவது அவரது அரை வேக்காடுத்தனத்தை காட்டுகிறது - ஜெயக்குமார்!

மேலும் கலைஞர் வீடு கட்டும் திட்ட பணிகளுக்கு பயணாளிகளிக்கான ஆனைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா கடந்த அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு தேவையான தொழிற்சாலைகள் போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை எனவே புதிய தொழிற்சாலைகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவே அடிக்கடி முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக பேசினார். மேலும் தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் முறையாக செயல்படுகின்றன பணி செய்கின்றனரா என உளவுத்துறை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்க்க தங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் பொதுமக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த திமுக அரசு பாடுபடும் எனவும் பேசினார்.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை திட்டத்தின் கீழ் பணியாற்றும் 32,500  ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். சமிக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 60: 40 என்ற‌ அடிப்படையில் மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதி தற்போது வரை வராத சூழ்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கையில் பேரில் 32, 500 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத துறை சார்ந்த அலுவலர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தை மாநில அரசின் நிதி பங்களிப்பில் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும் அமைச்சர்கள் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்போது 219 ஆவது தொகுதியாக வாணியம்பாடி தொகுதியில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழக அரசு சூப்பர் பிளான்.. 3 நாள் தொடர் விடுமுறை.. www.tnstc.in

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News