இந்தி மாதம் கொண்டாட்டம் சர்ச்சை.. மற்ற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி -முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

Hindi Month Celebration Controversy: இந்தி பேசாத மாநிலங்களில் 'இந்தி மாதம்' கொண்டாடுவது என்பது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி என்றும், அதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2024, 04:16 PM IST
இந்தி மாதம் கொண்டாட்டம் சர்ச்சை.. மற்ற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி -முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் title=

MK Stalin Condemns PM Modi: பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், "சென்னையில் உள்ள டிடி தமிழ் (DD Tamil) தொலைக்காட்சி சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்காமல், இந்தி மாதம் கொண்டாட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்

இந்தநிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் 'இந்தி மாதம்' கொண்டாடுவது என்பது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி, அதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்.

இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு

மேலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவுட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை டேக் செய்து, "நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை. பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும். இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க - சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தங்களை எம்ஜிஆர் என்கிறார்கள்... விஜய்யை டார்கெட் செய்யும் அதிமுக!

மேலும் படிக்க - அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி? மீண்டும் ஒரு குட் நியூஸ்? அரசு வைத்த ட்விஸ்ட்

மேலும் படிக்க - பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்திதான் - துரை வைகோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News