இந்தியா, தென்னாப்பிரிக்க இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது, மூன்றாவது போட்டி அக். 9, 11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நாளைய போட்டியை முன்னிட்டு, இந்திய வீரர்கள் போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ள ஷர்துல் தாக்கூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது, "தோனியின் அனுபவம் மிகவும் முக்கியமானது என்பதால் எல்லோரும் அவரை மிஸ் செய்கிறோம். அவர் 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஏறத்தாழ 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவர் நிறைய டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இதுபோன்ற அனுபவமிக்க வீரரை நீங்கள் சந்திப்பது அரிது. நாங்கள் அவரை நிச்சயமாக மிஸ் செய்கிறோம்.
இங்கு விளையாட வரும் பந்து வீச்சாளர்களும் பந்துகளை அனைவரும் ரன் அடிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரைப் பார்த்தால், எங்கள் பந்துவீச்சாளர்களை விமர்சிக்கத் தோன்றும். நாங்கள் தொடரை வென்றதால், அவர்களின் பந்துவீச்சாளர்களையும் விமர்சிக்க தோன்றும். அவர்களது பந்துவீச்சாளர்களும் நன்றாக வீசினர்.. ஒருவரின் நிலைத்தன்மையைப் பற்றி நீங்கள் கேட்டால், ஆடுகளத்தின் நிலையையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | உலகக்கோப்பைக்கு இவரும் கிடையாதா? - இந்திய அணியை துரத்தும் காயம்!
சில நேரங்களில், 350 ரன்களுக்கு மேல் ஸ்கோர் உள்ள ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம். அப்படியானால், அனைத்து பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை கொடுத்திருப்பார்கள். இந்தியா ஒருபோதும் ஒருதலைப்பட்சமான ஆட்டத்தை ஆடியதில்லை, போட்டியிட்டுக்கொண்டேதான் எப்போதும் இருக்கிறது. எப்போதும் ஆட்டத்தில் போராட்டம் இருக்கும். நாங்கள் 1-2 போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஆனால் நாங்கள் அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, எங்கள் அணியில் நிலைத்தன்மை உள்ளது.
நீண்ட நாட்களாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். வெளிப்படையாக, ஏழாவது அல்லது எட்டாவது வீரராக களமிறங்குபவர் கூட அணிக்காக சில ரன்களை எடுத்தால் அது எப்போதும் சிறந்ததுதான். பெரிய ஸ்கோரை துரத்தும்போது இது உதவிகரமாக அமைகிறது.
ஆஸ்திரேலியா உடன் விளையாடும்போது பார்த்தால், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் நின்று விளையாடுகிறார்கள். இங்கிலாந்தில் கூட கீழ் வரிசை வரை தரமான பேட்டர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நாங்களும் அதை விரும்புகிறோம்" என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சன் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த ஷர்துல் தாக்கூர் வெற்றி இலக்கை நோக்கி இந்தியாவை அழைத்து செல்ல பேருதவியாக இருந்தார். துரதிஷ்டவசமாக, கடைசி கட்டத்தில் ஷர்துல் தாக்கூர் தனது விக்கெட்டை இழந்தார். அவர் அன்று களத்தில் இருந்தபோது, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அந்த போட்டியில் அவர் ஏழாவது வீரராக களமிறங்கியது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதும் போர்'களம்' ரெடி; ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ