மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வியடைந்த நிலையில், நோ பால் என்று அறிவிக்காத நடுவரை விராட் கோலி கடுமையாக சாட்டியுள்ளார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மும்பை 187 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி இறுதியில் ஒரு பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், மலிங்கா வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் முடிந்தது. ஆனால், மலிங்கா நோ பால் வீசியது பின்னர் தெரிய வந்தது. அதை நடுவர் கவனிக்காதது பெங்களூரு தோல்வியடைய காரணமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, நாம் க்ளப் போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் தரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நடுவர்கள் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். என்று தெரிவித்தார்.