8ஆவது டி20 உலகக்கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால், வங்கதேசம் அணியை வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது. டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது. இப்போட்டியில் பொறுப்பாக ஆடிய விராட் கோலி 20 ஓவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு அவுட்டாக, கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி. அவர் 16 ரன்கள் எடுத்தபோது 20 ஓவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த மகிலா ஜெயவர்தனேவை முந்தினார். இப்போது, விராட் கோலி முதல் இடத்திலும், 1016 ரன்களுடன் ஜெயவர்தனே 2ஆம் இடத்திலும் இருக்கிறார். 965 ரன்களுடன் கெயில் 3வது இடத்தில் இருக்கிறார்.
விராட் சாதனை படைத்த அதேநேரத்தில் இந்த உலக கோப்பையில் பார்ம் இல்லாமல் தவித்து வந்த கே.எல்.ராகுல் பார்முக்கு திரும்பினார். வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார். முதலில் தடுமாறிய அவர், அடுதடுத்த ஓவர்களில் ஃபார்முக்கு திரும்பி பந்துவீச்சாளர்களை நொறுக்கி எடுத்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 4 சூப்பர் சிக்சர்களையும் விளாசினார்.
மேலும் படிக்க | இந்திய அணியில் 2 பிளேயரை தூக்குங்க - ஹர்பஜன் ஆவேசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ