ஐபிஎல் 2023 தொடருக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. 10 ஐபிஎல் அணிகளும் இன்னும் 20 நாட்களுக்குள் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும். அதனால், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியில் ரிசர்வ் பிளேயராக இடம்பிடித்திருக்கும் ஷர்துல் தாக்கூர், ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரை இந்த முறை ஏலத்துக்காக அணியில் இருந்து விடுவிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?
10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், அவ்வளவு தொகைக்கு உரிய ஆட்டத்தை விளையாடவில்லை. அவர் கடந்த சீசனில் விளையாடிய 14 ஆட்டங்களில் 120 ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும், ஷர்துல்தாக்கூர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதிலும், ஓவருக்கு 10 ரன்கள் என்ற மோசமான ரன்ரேட்டைகொண்டிருக்கிறார். அவர் மீது அந்த அணி பெரிய எதிர்பார்ப்பை வைத்து ஐபிஎல் ஏலத்தில் வாங்கியபோதும், ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டியிருந்தது.
இதனால், தற்போது ஏலத்தில் விடுவித்து மிக குறைந்த விலைக்கு அவரை மீண்டும் வாங்க முடிவு செய்திருக்கிறதாம். அதேபோல், விக்கெட் கீப்பராக இருக்கும் கே.எஸ்.பரத் மற்றும் மன்தீப் சிங் ஆகியோரையும் டெல்லி அணி விடுவிக்க முடிவு செய்திருக்கிறது. அணியில் ரிஷப் பன்ட் இருப்பதால், பரத்துக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோல், மன்தீப் சிங் 3 போட்டிகளில் களமிறங்கி வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ