உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணையை வெளியிட்டது ICC!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அறிவித்துள்ளது!

Written by - Mukesh M | Last Updated : Jun 20, 2018, 07:17 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணையை வெளியிட்டது ICC! title=

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அறிவித்துள்ளது!

முதன்முறையாக நடத்தப்படவுள்ள இந்த உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் மோதுகின்றன. வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள் தொடங்கும் டெஸ்ட் தொடர் ஆனது 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டி 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC தெரிவித்துள்ளதன் படி, டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த அணிகள் 6 தொடர்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடும். 

மூன்று ஆண்டுகளாக நடத்தப்படும் டெஸ்ட் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என ICC அறிவித்துள்ளது.

Trending News