டிகாக் முதல் டுபிளெசிஸ் வரை: 2021ல் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்கள்!

குயின்டன் டி காக் தொடங்கி உன்முக்த் சந்த் வரை, 2021ல் 5 முக்கிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் ஓய்வை அறிவித்துள்ளனர்.    

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2022, 10:49 AM IST
  • ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் இரண்டு ஐசிசி போட்டிகளை வெற்றிகரமாக நடத்தின.
  • கடந்த ஆண்டில் சில வீரர்கள் ஓய்வை அறிவித்தனர். இவை கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டிகாக் முதல் டுபிளெசிஸ் வரை: 2021ல் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்கள்! title=

2020 மற்றும் 2021ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சோதனை ஆண்டாகவே மாறியது.  கொரோனா தொற்றால் பல போட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டன.  ஆனாலும் ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் இரண்டு ஐசிசி போட்டிகளை வெற்றிகரமாக நடத்தின.  WTC இறுதி போட்டி, T20 உலகக் கோப்பை போட்டிகள் மற்றும்  இதர சர்வதேச போட்டிகளும் நடைபெற்றது.  2021ல் கிரிக்கெட் உலகில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.  பல புதிய முகங்கள் கிரிக்கெட் உலகிற்குள் வந்தனர்.  அதேசமயத்தில் கடந்த ஆண்டில் சில வீரர்கள் ஓய்வை அறிவித்தனர்.  இவை கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

ALSO READ | தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

குயின்டன் டி காக் (Quinton de Kock)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிவடைந்த சில மணிநேரங்களில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் தனது 29 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சியூட்டும் முடிவை அறிவித்தார்.  தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட இந்த முடிவை எடுத்துள்ளார்.  டி காக் டெஸ்ட் போட்டிகளில் 38.82 சராசரியில் 3300 ரன்கள் அடித்துள்ளார். 

உன்முக்த் சந்த் (Unmukt Chand)

உன்முக்த் சந்த் இந்தியா அணியில் அறிமுகமாகவில்லை என்றாலும், அவர் மிகவும் பேசப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்தார், மேலும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. முன்னாள் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த இவருக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்.  முன்னாள் இந்திய U-19 உலகக் கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையுடன் 2024ல் அமெரிக்க அணிக்காக விளையாட உள்ளார்.  தற்போது நடந்து வரும் பிக் பாஷ் லீக் 2021/22ல் விளையாடி வருகிறார்.

ஏபி டி வில்லியர்ஸ் (AB de Villiers)

ஏபி டி வில்லியர்ஸ் நீண்ட நாட்களுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இந்தியன் பிரீமியர் லீக்கில் மட்டுமே விளையாடி வந்தார்.  ஐபிஎல்-ல்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  டி வில்லியர்ஸ் நவம்பர் 2021-ல் தனது ஓய்வை அறிவித்தார்.   தனது டி20 வாழ்க்கையில்  340 போட்டிகளில் 9424 ரன்கள் குவித்துள்ளார்.

ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf du Plessis)

டி காக்கிற்கு முன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி SA கிரிக்கெட்டை திகைக்க வைத்தவர் ஃபாஃப் டு பிளெசிஸ். 36 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த டு பிளெசிஸ், 2020ல் கேப்டன் பதவியில் இருந்து விலகி நீண்ட காலம் விளையாடத் தயாராக இருந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து, டி20 உலகக் கோப்பைகளில் கவனம் செலுத்த டெஸ்ட் கிரிக்கெட்டை முழுவதுமாக கைவிட முடிவு செய்தார்.  ஆச்சரியப்படும் விதமாக, அவர் T20 உலகக் கோப்பை 2021 க்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. டு பிளெசிஸ் ஐபிஎல் 2021 இன் 2வது அதிக ரன் குவித்தவர் மற்றும் 16 போட்டிகளில் 633 ரன்கள் எடுத்தார். 

faf

ஷெஹான் ஜெயசூரியா (Shehan Jayasuriya)

திறமையான ஷெஹான் ஜெயசூர்யா ஜனவரி 2021-ல் அமெரிக்காவிற்குச் செல்வதற்காக இலங்கை கிரிக்கெட்டில் இருந்து விலகினார். பல சந்தர்ப்பங்களில் இலங்கை அணியில் விளையாடிய ஜெயசூரியா, SL கிரிக்கெட்டில் இருந்து வெளியேற முடிவு செய்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடியேறினார்.  ஜனவரி 2024-ல் அமெரிக்க அணியில் விளையாட உள்ளார்.   

ALSO READ | Cricket: வெற்றிபெற்ற இந்திய அணிக்கு ஒரு புள்ளி குறைப்பு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News