கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்வி - டாப்பில் RR!

RR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2024, 11:58 PM IST
  • ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • பஞ்சாப் அணி போராடி தோல்வியடைந்தது.
  • ஹெட்மயர் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டார்.
கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்வி - டாப்பில் RR! title=

RR vs PBKS Match Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சண்டிகரின் முல்லான்பூர் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவாண் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. துணை கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டு வந்தாலும், சாம் கரன் கேப்டன்ஸி பொறுப்பை இன்று ஏற்றுக்கொண்டார். சிக்கந்தர் ராஸாவிற்கு பதில் லிவிங்ஸ்டன் இன்று இடம்பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் மற்றும் அஸ்வின் இன்று விளையாடவில்லை. அவர்களுக்கு பதில் தனுஷ் கோட்டியான் மற்றும் ரோவ்மான் பாவெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

மிடில் ஓவர்களில் மோசம்

பஞ்சாப் அணிக்கு இன்று தொடக்கம் சரியாக அமையவில்லை. 3.4 ஓவர்களில் 27 ரன்களை எடுத்திருந்த பஞ்சாப் அணியில் அதர்வா டைடே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், பேர்ஸ்டோவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் பவர்பிளேவில் நிதானமாகவே விளையாடினர். 6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்தது. பவர்பிளே முடிந்து ஸ்பின்னர்கள் வந்தது விக்கெட்டுகள் வரிசையாக விழ தொடங்கியது. பிரப்சிம்ரன் 10, பேர்ஸ்டோவ் 15, சாம் கரன் 6, ஷஷாங்க் சிங் 9 என சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்... வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!

அஷுடோஷ் சிங் அசத்தல்

ஜித்தேஷ் சர்மா 29 ரன்கள், லிவிங்ஸ்டன் 21 ரன்கள் என ஆறுதல் அளித்தாலும் கடைசி ஓவர்களில் அஷுடோஷ் சிங் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 31 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும் அவரும் கடைசி பந்தில் ஆடட்மிழக்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. ஆவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட், குல்தீப் சென், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

148 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியான் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் ராஜஸ்தானின் நல்ல தொடக்கம் இதுதான்.  8.2 ஓவர்களில் 56 ரன்களை எடுத்திருந்தபோது கோட்டியான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டாப்பில் ராஜஸ்தான்

ஜெய்ஸ்வால் 39, சஞ்சு 18, ரியான் பராக் 23, ஜூரேல் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ரோவ்மான் பாவெல் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் மகராஜ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசி, முதல் இரண்டு பந்துகளை டாட் பந்தாக்கினார்.

அடுத்த பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு ஹெட்மயர் அதிரடி காட்ட, நான்காவது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. 2 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில், 5வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி உறுதி செய்தார் ஹெட்மயர். ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ரபாடா, சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வானார். 

மேலும் படிக்க | MI vs CSK: இது புதிய கேப்டன்களின் El Clasico - வான்கடே ஆடுகளத்தில் அட்வான்டேஜ் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News