ஐபிஎல் 2022-ன் இரண்டாவது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மதியம் 3.30-க்கு தொடங்கும் இந்த போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. டிம் டேவிட், கீரன் பொல்லார்டு, டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா என மும்பை அணி முகுந்த பலத்துடன் களம் இறங்க உள்ளது. இதில் சில பேட்டிங்கிலும் அணிக்கு பலம் சேர்ப்பர். மும்பை அணி சமீபத்திய ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களில், ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டும் இந்த சீசனில் விளையாட மாட்டார்.
மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்பைப் போல் சிறந்த தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லை. முருகன் அஷ்வின் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகியோர் மட்டுமே இந்தியாவை சேர்ந்த ஸ்பின்னர்கள். ஃபேபியன் ஆலன் ஒரு ஆல்ரவுண்டராக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சிக்கலாகவே உள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மாவும் அவ்வப்போது பவுலிங் போட கூடிய திறமை கொண்டுள்ளார். ஐபிஎல் 2011 ஏலத்தில் மும்பை இந்தியன் அணியில் இடம்பெறும் முன்பு, ஐபிஎல் 2008-2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் பவுலிங் செய்துள்ளார்.
ரோஹித் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகி, 5 ஐபிஎல் பட்டங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார். இந்தியாவின் தற்போதைய அனைத்து டி20, ஒருநாள், டெஸ்ட் கேப்டனாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். 213 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 40 அரைசதங்களுடன் 5611 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம் டெல்லி கேபிடல்ஸ், ரிஷப் பண்ட், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. ஏலத்தில் எடுக்கப்பட்ட தாகூர் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க உள்ளார்.
MI Probable பிளேயிங் 11:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஸ்வின்
டெல்லி Probable பிளேயிங் 11:
டிம் சீஃபர்ட், பிருத்வி ஷா, மன்தீப் சிங்/கேஎஸ் பாரத், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், சேத்தன் சகாரியா/குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், லுங்கி என்கிடி
மேலும் படிக்க | பந்து ஸ்டம்பில்பட்டும் அவுட் இல்லை..தப்பித்த ராயுடு! கடுப்பான கேகேஆர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR