IND vs BAN: இன்று 2 வது நாள் ஆட்டத்தை ஆட உள்ளது இந்திய அணி

வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா அணி, இன்று முதல் இன்னிங்சின் ஆட்டத்தை தொடர்ந்து ஆட உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2019, 11:26 AM IST
IND vs BAN: இன்று 2 வது நாள் ஆட்டத்தை ஆட உள்ளது இந்திய அணி title=

கொல்கத்தா: 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் நேரட ஆட்ட முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சின் ஆட்டத்தை தொடர்ந்து ஆட உள்ளது. 106 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த வங்காளதேச அணியை விட முதல் நாளில் இந்தியா 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் நேரட ஆட்ட முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி* 59(93) ரன்னுடனும், அஜின்கியா ரஹானே* 23(22) களத்தில் உள்ளனர். வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களா களம் இறங்கிய மயங்க் (14), ரோஹித் (21) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்கள். அதேபோல புஜரா அரைசதம் அடுத்து 55 ரன்னுக்கு அவுட் ஆனார். நாளை தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து ஆட உள்ளது. வங்காளதேச சார்பில் எபாதத் ஹொசைன் 2 விக்கெட்டும், அல்-அமீன் ஹொசைன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது. வங்காளதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் இறுதி வரை ஒருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த வங்காளதேசம், கடைசியாக 30.3 ஓவரில் 106 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் ஷாட்மேன் இஸ்லாம் 24 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் இஷாந்த் 5 விக்கெட்டும், உமேஷ் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News