சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!

India Vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று நியூயார்க்கில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2024, 12:05 PM IST
  • ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி.
  • இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்.
  • நியூயார்க்கில் போட்டி நடைபெறுகிறது.
சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்! title=

India Vs Pakistan: ஞாயிற்றுக்கிழமை இன்று நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலக கோப்பையில் விளையாடுகின்றன. கடைசியாக இரண்டு அணிகளும் ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையில் நடைபெற்றது. அதில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இன்று டி20 உலக கோப்பையில் மோத உள்ளது. இரண்டு அணிகளுக்கும் சூப்பர் ஸ்டார் வீரர்கள் உள்ளதால் இன்றைய போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்திற்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் அணி USAவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. 

மேலும் படிக்க | இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?

 

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 6 முறையும் பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த உலக கோப்பையின் போது பாகிஸ்தான் முதல் முறை வெற்றி பெற்றது. அடுத்து 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தனி வீரராக போட்டியை வென்று கொடுத்தார். 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 31/4 என்று தடுமாறியது. அங்கிருந்து விராட் கோலி 53 பந்துகளில் 82* ரன்கள் அடித்து வெற்றி பெற செய்தார். 

மொத்தமாக இரு அணிகளும் 12 முறை டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் இந்தியா 9 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியா பக்கம் ரோஹித் - கோலி, பாகிஸ்தான் பக்கம் பாபர் - ரிஸ்வான் உள்ளனர். மறுபுறம் ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் பாகிஸ்தானுக்கு டப் கொடுக்கலாம்.

இந்தியாவின் பிளேயிங் 11

பேட்டிங் வரிசையில் அயர்லாந்திற்கு எதிராக விராட் மற்றும் ரோஹித் ஓப்பனிங்கில் இறங்கினர். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்கினர். இன்றைய போட்டியில் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனை களமிறக்க இந்திய அணி முயற்சி செய்யலாம். இருப்பினும் வெற்றி பெற்ற அணியுடன் களமிறங்கவும் அதிக வாய்ப்புள்ளது. 

இந்தியாவின் உத்ததேச பிளேயிங் 11 

ரோஹித் ஷர்மா (c), விராட் கோலி, ரிஷப் பந்த் (wk), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் , ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தானின் உத்ததேச பிளேயிங் 11 

பாபர் அஸம் (c), சைம் அயூப், முகமது ரிஸ்வான் (wk), உஸ்மான் கான், ஃபகர் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், ஹரிஸ் ரவுஃப்

மேலும் படிக்க | தோனி ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக முடியும் - மேத்யூ ஹைடன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News