புதுடெல்லி: டீம் இந்தியா கேப்டன் விராட் கோலி தனது உடல் ஆரோக்கியத்தை துல்லியமாக பராமரிப்பதற்காகவும், உடற்தகுதிக்காகவும் உலகம் முழுவதும் பிரபலமானவர். விராட் கோலி உடற்பயிற்சிக்கும் உடற்தகுதிக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய அணியில் உள்ள அனைத்து வீர்ரகளும் இப்போது இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
ஆனால் சமீபத்தில், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தொடர்ந்து ஃபிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்து வருகிறார். இது இந்திய அணிக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், வருண் குறித்து, விராட் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வருண் சக்ரவர்த்தி தொடரிலிருந்து விலகினார்
IPL 2020 இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால், வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், பின்னர் தோள்பட்டை காயம் காரணமாக அவரை தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று. இதன் பின்னர், இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும் டி 20 தொடரிலும் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஃபிட்னஸ் சோதனையில் தொடர்ந்து இரண்டு முறை தோல்வியடைந்த பின்னர், அவர் இந்த தொடரிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ALSO READ: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கும் BCCI
இரண்டு கிலோமீட்டர் ரேஸ் டெஸ்டிலும் தோல்வியடைந்தார்
வருண் சக்ரவர்த்தி, அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, உடற்தகுதி பெற, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார். யோ-யோ டெஸ்ட் மற்றும் 2 கி.மீ ரேஸ் டெஸ்டில் வருண் இரண்டு முறை தோல்வியடைந்தார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று. அணியில் இடம் பெற, ஒவ்வொரு வீரரும் யோ-யோ சோதனையில் (Yo-Yo test) தேர்வு பெற வேண்டும். BCCI எட்டரை நிமிடங்களில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடுவதற்கான புதிய சோதனையையும் சேர்த்துள்ளது.
வருண் சக்ரவர்த்திக்கு டி-20 வடிவத்தில் நல்ல திறன் இருந்தும், தனது உடற்தகுதியை சரியாக கவனித்துக்கொள்ளாமல் சோதனைகளில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், விராட் கோலி கோவத்தில் உள்ளதாக வட்டாரங்காள் தெரிவிக்கின்றன. அவரை தனியாக குறிப்பிடாமல், பொதுவாக, இந்திய அணியில் இடம்பெற வீர்ரகள் தங்கள் உடற்தகுதியில் இன்னும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
'உடற்தகுதிக்கு சமரசம் இல்லை'
வருண் சக்ரவர்த்தி குறித்து கேள்விகள் கேட்டபோது, அணியின் ஃபிட்னஸ் குறித்து எந்த சமரசமும் செய்ய முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) கூறினார். மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கோலி கூறுகையில், 'இந்திய கிரிக்கெட் அணிக்காக உருவாக்கப்பட்ட ஃபிட்னஸ் முறையை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடற்தகுதியைப் பொறுத்தவரையில், மிக உயர்ந்த மட்டத்தில் அணி இருக்க வேண்டும். அதற்கான நன்றாக பயிற்சி எடுக்க வேண்டும். இந்திய அணியில் இடம்பெற வீரர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் அப்படி செய்வார்கள் என நான் நம்புகிறேன். இதில் எந்த சமரசமும் செய்ய முடியாது’ என்று கூறினார்.
ALSO READ: Ind vs Eng: இந்தியா அதிரடி வெற்றி, இங்கிலாந்து அணியை பேக் செய்தது அஸ்வின்-அக்சர் ஜோடி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR