உலக கோப்பை கிரிக்கெட்: 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி

2021 டி20 உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள் மற்றும் எட்டு அதிகாரிகளை மட்டுமே கூட்டிவர ஐசிசி அனுமதி அளித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2021, 10:48 AM IST
உலக கோப்பை கிரிக்கெட்: 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி title=

கொரனோ தொற்றுக் காரணமாக இந்தியாவில் நடக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ளது.  ஐசிசி நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை முன்கூட்டியே அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் அவர்களது வீரர்கள் மற்றும் உடன் வரும் அதிகாரிகளின் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.  

மேலும் ஒவ்வொரு அணியும் அவர்களுக்கு தேவையான கூடுதல் வீரர்களை கொண்டு வரலாம் எனவும் ஆனால் அதற்கான செலவுகளை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியமே ஏற்க வேண்டும்,  ஐசிசி அதற்கு பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளது.  பயோ பபிள் மற்றும் கோவிட் காரணங்களால் இந்த ஆண்டு இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.  15 வீரர்கள் மற்றும் உடன் வரும் எட்டு அதிகாரிகளுக்கு மட்டுமே செலவுகளை ஐசிசி ஏற்று கொள்ளும்  என்று அறிவித்துள்ளது.  

இந்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்க உள்ளது. துபாய், அபுதாபி மற்றும் சார்ஜாவில் அக்டோபர் 17 ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கு பெறும் தகுதி சுற்றுப்போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மற்றொரு மைதனத்தில் நடைபெறும். 

ALSO READ | England vs India: 2வது டெஸ்ட் போட்டி கே.எல் ராகுல் செய்த சாதனை!

இதில் தகுதி பெறும் நான்கு அணிகளும் சூப்பர் 12 அணிகளுடன் கலந்து கொள்ளும். அந்நாட்டு கிரிக்கெட் வாரியமே கூடுதலாக எத்தனை வீரர்களை கூட்டி செல்லலாம் என்று ஐசிசி கூறியுள்ளது. கொரோனா தொற்று அல்லது காயங்கள் ஏற்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

அணியின் விபரங்களை தெரிவித்த பின் தனிமைப்படுத்தும் தேதிக்கு 5 நாட்கள் முன்பே ஏதும் மாற்றங்கள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் எனவும், அதன் பின் மாற்ற முடியாது என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.  மேலும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை ஐக்கிய அமீரகத்தில் அனுப்ப வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News