Sir Garfield Sobers With Indian Cricket Team: வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடமான பார்படாஸில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் உடன் இந்திய அணியினர் சந்தித்தனர்.
இந்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு இந்திய அணி நீண்ட ஓய்வில் உள்ளது. இது WTC இன் 2023-25 சுழற்சியின் இந்தியாவின் தொடக்கமாகும்.
சாதனைகளை செய்ய காத்திருக்கும் விராட்!
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மேற்கு இந்திய தீவுகளில் அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், சுற்றுப்பயணத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைவதை உள்ளடக்கிய சில சாதனைகளை புரிய காத்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஆஷஸ் டெஸ்ட் ஏற்படுத்தும் அதிரடி மாற்றங்கள்! ஐசிசி ஆடவர் தரவரிசையில் மாற்றம்
பிசிசிஐ பகிர்ந்த வீடியோ
இந்திய அணியின் முன்னணி பேட்டர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கு இந்திய தீவுகளின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்கள் வந்து, கைகுலுக்கி, பழம்பெரும் கிரிக்கெட் வீரருடன் உரையாடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் கார்பீல்ட் சோபர்ஸ் பெவிலியனுக்கு அடுத்ததாக இந்த சந்திப்பு தற்செயலாக நடந்தது.
In Barbados & in the company of greatness!#TeamIndia meet one of the greatest of the game - Sir Garfield Sobers#WIvIND pic.twitter.com/f2u1sbtRmP
— BCCI (@BCCI) July 5, 2023
நெகிழ்ச்சியான தருணம்
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், அணியின் இளம் வீரர்களை கார்பீல்ட் சோபர்ஸ் அறிமுகப்படுத்தினார். "இது சுப்மான் கில். எங்களின் இளம் மற்றும் மிகவும் உற்சாகமான பேட்ஸ்மேன்களில் ஒருவர்" என்று ராகுல் டிராவிட் கூறினார். சோபர்ஸ் விராட் கோலியுடன் பேசிக்கொண்ட தருணத்தை ரசிப்பதையும் வீடியோவில் காணலாம்.
யார் இந்த சர் கார்பீல்ட் சோபர்ஸ்?
குறிப்பிடத்தக்க வகையில், சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக சோபர்ஸ் பரவலாக அறியப்படுகிறார். அவர் 1954ஆம் ஆண்டு முதல் 1974ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத் தீவுகளுக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57.78 என்ற சிறந்த சராசரியுடன் 8032 ரன்கள் எடுத்தார். அவர் 26 சதங்கள் மற்றும் 30 அரை சதங்களை குவித்துள்ளார். இவரின் தனிப்பட்ட உச்சபட்ச ஸ்கோர் 365 நாட் அவுட்டாகும். கூடுதலாக, அவர் தனது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 235 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவர் பெயரில் ஐசிசி மிகப்பெரிய விருதையும் வழங்கி வருகிறது. ஐசிசி வழங்கும் ஒரு தசாப்தத்தின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் விருது சர் கார்பீல்ட் சோபர்ஸ் பெயரில் தான் வழங்கப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை விராட் கோலி வென்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் அனைவரும் வரவிருக்கும் தொடருக்கு தயாராகி வருகின்றனர், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களும் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க | இந்திய அணி மிஸ் செய்யும் இந்த 3 வீரர்கள்... கோப்பையும் கைவிட்டு போக அதிக வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ