புதுடெல்லி: இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல வீரர்களின் வாழ்க்கை உருவாக காரணமாக இருந்தவர். ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்ற பலர் தோனியின் காரணமாக இன்று புகழின் உச்சத்திற்கு வந்துள்ளனர். அதேநேரத்தில் சில வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை தோனியால் முடிவுக்கு வந்துள்ளது. அந்த வீரர்கள் யார் என்பதை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
கேப்டன் கூழ் என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி (Mahendra Singh Dhoni) போன்ற ஒரு சிறந்த வீரர் அணியில் இருக்கும் போது, அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை, அந்த இடத்தில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.
கவுதம் காம்பீர்:
இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். கவுதம் கம்பீரின் பேட்டிங் 2007 டி-20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவை பட்டம் வெல்ல காரணமாக இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய வாய்ப்பை அவருக்கு சரியாக வழங்கப்படவில்லை. இது தவிர, கம்பீர் ஓய்வு பெற்ற பின்னர் தோனி மீது பல முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தோனியின் காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாககவும் கம்பீர் பலமுறை கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக்:
தோனி காரணமாக தினேஷ் கார்த்திக்கின் (Dinesh Karthik) கிரிக்கெட் கேரியர் வாழ்க்கையும் பிரகாசிக்கவில்லை. தோனி நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வந்ததால், கார்த்திக்கு அணியில் இடம்பெற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனது 17 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான கார்த்திக், 2004 ஆம் ஆண்டில் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பிடித்தார். இருப்பினும், 2004 ஆம் ஆண்டில் தான் தோனியும் இந்திய அணியில் அறிமுகமானர். தோனியின் அறிமுகத்திற்கு பிறகு தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து அவுட் ஆனார்.
ALSO READ | ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு
நமன் ஓஜா:
கார்த்திக்கைப் போலவே, நமன் ஓஜாவின் (Naman Ojha)வாழ்க்கையும் தோனியின் செயல்திறன் காரணமாக முடிந்தது. தோனி அறிமுகமான அதே நேரத்தில் ஓஜாவும் அணியில் இடம் கிடைக்க இருந்தது. ஆனால் பின்னர் தல தோனி காரணமாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர், இலங்கைக்கு எதிராக, 2010 இல் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாட நமன் ஓஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர், 2015 இல், இலங்கைக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் விளையாடியுள்ளார். ஆனால், 2019 வரை விக்கெட் கீப்பிங்கில் தனது ஆதிக்கத்தை தோனி செலுத்தி வந்ததால், இந்திய அணியில் விளையாட நமன் ஓஜாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பார்த்திவ் படேல்:
தோனிக்கு முன் விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேலும் (Parthiv Patel) இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தோனி அணியில் நுழைந்தவுடன் பார்த்திக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் பார்த்திவ் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் இந்திய அணியில் தோனி போன்ற ஒரு வீரரை மாற்றுவது கடினம். பார்த்திவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தீப்தாஸ் குப்தா:
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீப்தாஸ் குப்தாவும் (Deep Dasgupta) ஒரு நல்ல விக்கெட் கீப்பராக இருந்தார். ஆனால் மற்ற வீரர்களுக்கு நடந்தது போலவே, அவருக்கும் நடந்தது. தோனி இந்திய டீம்மில் இடம் பிடித்தவுடன், தாஸ் குப்தாவுக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. டீம் இந்தியாவுக்காக அவரது ஒரு வருடம் மட்டுமே விளையாடி உள்ளார். தற்போது அவர் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.
ALSO READ | MS Dhoni: 2020-யிலேயே ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்த பட்டியலில் இன்னும் தலதான் முதலிடம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR