ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு தீபக் சாஹரை தங்களது அணியில் எடுத்து. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது தொடை எலும்பு பிரச்சனை காரணமாக பாதியில் வெளியேறினார். இரண்டாவது ஓவர் வீசும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. பிறகு மீதமிருந்த பந்துகளை வெங்கடேஷ் அய்யர் வீசினார். தொடை எலும்பு பிரச்சினையின் விளைவாக, இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்தும் சாஹர் விளக்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் 2022-ல் சாஹர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி!
மருத்துவ அறிக்கையில் படி சாஹர் நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தீபக் சாஹர் ஐபிஎல்-ல் விளையாடவில்லை என்று அது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் 2வது விலையுயர்ந்த வீரராக சாஹர் இருந்தார். சாஹரை தங்களது அணியில் எடுக்க சிஎஸ்கே தவிர, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் போட்டி போட்டது. 13.75 கோடி வரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுக்க முயன்றது.
சென்னை அணி நிர்வாகம், சாஹர் சரியான நேரத்தில் உடல் தகுதி பெறுவார் என்றும், போட்டியின் முழு காலத்திற்கும் அவர் இருப்பார் என்றும் நம்புகிறது. சாஹரைத் தவிர, சூர்யகுமார் யாதவும் ஸ்ரீலங்கா டி20-ல் இருந்து வெளியேறி உள்ளார். பயோ பப்பில் காரணமாக இருவருக்குமான மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதற்கிடையில், சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சிகளை மார்ச் 2வது வாரத்தில் இருந்து தொங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் கடைசி வாரம் முதல் மே வரை இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. போட்டிகள் மற்றும் இடங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஸ்ரீலங்கா தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் விலகல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR