சிஎஸ்கே நட்சத்திர வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது நிரந்தர துவக்க வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் அண்மையில் அறிமுகமான அவர் அவ்வப்போது இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். அதோடு இந்தாண்டு நடைபெற்று முடிந்த நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்கள் என்கிற சராசரியுடன் 490 ரன்களை குவித்து அசத்தினார். இந்த ஆண்டு சென்னை அணி 5 ஆவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற இவரும் ஒரு காரணம். அந்த அளவிற்கு அவர் இந்த சீசனில் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார்.
மேலும் படிக்க | Sai Sudharsan: பத்திரனா ஓவரை அடித்த ரகசியம் இதுதான்: தமிழக வீரர் சாய் சுதர்ஷன்
இந்திய அணியில் இருந்து விலகல்
அதோடு எதிர்வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் கூடுதல் ஸ்டான்ட் பை வீரராக இடம்பிடித்திருந்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். இப்படி திடீரென இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் வெளியேற காரணம் என்ன? என்று விசாரிக்கும்போது, ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள வேளையில் ஜூன் 3-4 ஆகிய தேதிகளில் அவரது திருமணம் நடைபெறவுள்ளது. அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
ருதுராஜ் காதலி உட்கர்ஷா பவார்
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண் யார்? என தேடத் தொடங்கினர். ருதுராஜின் வருங்கால மனைவியின் பெயர் உட்கர்ஷா பவார். கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி அவர் புனே நகரில் பிறந்துள்ளார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த அவர் தனது 11-ஆவது வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதோடு மகாராஷ்டிரா மாநில பெண்கள் அணிக்காகவும் அவர் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளரான இவர் பிட்னஸ் குறித்த பட்டபடிப்பினையும் முடித்துள்ளார். மஹாராஷ்டிரா அணிக்காக ஆண்கள் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட்டும், பெண்கள் அணிக்காக உட்கர்ஷா பவாரும் விளையாடி வருகிறார்.
மேலும் படிக்க | உலக கிரிக்கெட் சாம்பியனாகுமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் லண்டனில் பலபரிட்சை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ