புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு மற்றுமொரு பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
முன்னதாக ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியுற்றார். சீன தைபே வீராங்கனை டாய் சு-யிங்கிடம் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோவியுற்றதால் வருத்தத்தில் இருந்தார். ஆனால் இன்றைய போட்டியில் வென்று வெண்கலம் வென்றுள்ளார்.
We are all elated by the stellar performance by PV Sindhu....She is India’s pride and one of our most outstanding Olympians: PM Modi congratulates PV Sindhu on winning the #Bronze at Tokyo #OlympicGames pic.twitter.com/p5sIkkibxL
— ANI (@ANI) August 1, 2021
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவை பி.வி. சிந்து (PV Sindhu) எதிர்கொண்ட சிந்து, வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
நான். பல வருடங்கள் கடினமாக உழைத்தேன். நான் நன்றாக செய்தேன் என்று நினைக்கிறேன். நான் வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததில் வருத்தப்பட வேண்டுமா? இறுதிப் போட்டியில் விளையாட முடியாதது தோல்வியா? என எனக்கு பலவிதமான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்று வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு பிவி சிந்து தெரிவித்தார்.
"I'm on cloud nine. Worked hard for so many years. I think I've done really well. I had a lot of emotions going through me - should I be happy that I won bronze or sad that I lost the opportunity to play in the final?" PV Sindhu in a statement after winning bronze medal pic.twitter.com/eCpk5cOVZP
— ANI (@ANI) August 1, 2021
பிவி சிந்துவின் சிறப்பான விளையாட்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது. அவர் இந்தியாவின் பெருமை மற்றும் எங்கள் மிகச் சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர் என்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
We are all elated by the stellar performance by PV Sindhu....She is India’s pride and one of our most outstanding Olympians: PM Modi congratulates PV Sindhu on winning the #Bronze at Tokyo #OlympicGames pic.twitter.com/p5sIkkibxL
— ANI (@ANI) August 1, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் (Tokyo Olympic Games) சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் சீன தைபேயின் டாய் சு-யிங்கிடம் பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். டாய் 21-18 மற்றும் 21-12 என்ற கணக்கில் இந்திய ஷட்லரை வென்றார்.
ALSO READ: பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR