மெல்போர்ன் நகரில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்!
மெல்போர்ன் நகரில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் இன்று நடந்த சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பும் மற்றும் கரோலின் வோஸ்னியாக்கி மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி போராடி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதற்கு முன்பு இருவரும் 6 ஆட்டங்களில் சந்தித்துள்ளனர், இதில் 4 போட்டிகளில் வோஸ்னியாக்கியும், 2 போட்டியில் ஹாலெப்பும் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் இன்று நடைப்பெற்ற போட்டியில் யார் வென்றாலும் அது அவர்களுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும் என்ற நிலையில் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்புடன் தொடங்கியது.
முதல் செட்டில் 7-6 (2) என்ற கணக்கில் கரோலின் வேஸ்னியாக்கி வென்றார். இரண்டாவது செட்டில் சிமோனா 3-6 என்ற கணக்கில் வென்றார். இதனால் மூன்றாவது செட் மிகவும் பரபரப்பாக சென்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் 6-4 என்ற கணக்கில் செட்டை தனதாக்கி சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வேஸ்னியாக்கி.
Caroline Wozniacki beats Simona Halep to clinch the #AusOpen Women's title. pic.twitter.com/uBeOoqo7f8
— ANI (@ANI) January 27, 2018
இது கரோலின் வோஸ்னியாக்கியின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இந்த வெற்றியின் காரனமாக கரோலின் வோஸ்னியாக்கி, சிமோனாவிடம் இருந்து உலக தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பறித்துக்கொண்டார்.