ஐபிஎல் தொடங்குவதற்கு ஒருமாதம் மட்டுமே இருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் காயமடைந்து வருவது அந்த அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே-வுக்கு சிக்கல்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. 14 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ள அவர், காயத்தால் விளையாடாமல் இருப்பது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் தோனியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் தீபக் சஹார். இப்போது, ருதுராஜ் கெய்க்வாட்டும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
மேலும் படிக்க | இந்திய அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - ரோகித் முடிவு
சிறந்த பேட்ஸ்மேன்
இதனால் ஐபில் தொடங்குவதற்கு முன்பே 2 பெரும் அதிர்ச்சிகளை தோனி தலைமையிலான சிஎஸ்கே எதிர்கொண்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கினார். 14 போட்டிகளில் 636 ரன்கள் எடுத்தார், இதில் ஒரு சதமும் அடங்கும்.
மேலும் படிக்க | ருதுராஜூக்கு வந்த சோதனை - வாய்ப்பு கிடைத்தும் அதிர்ஷ்டம் இல்லாத இந்திய வீரர்
உள்நாட்டுப் போட்டி
கடந்த ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு தொப்பியை வென்ற பிறகு உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்ட ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஹசாரே டிராபியில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இன்னிங்ஸ் தொடக்கத்தில் மெதுவாக விளையாடும் இவர், பின்னர் அதிரடியாக விளையாடக்கூடியவர். இதனால், தோனியின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவராக இருக்கிறார். காயம் குணமடைந்து ஐபிஎல்லுக்கு திரும்புவாரா? என்பது சிஎஸ்கேவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR