புதுடெல்லி: சேத்ஷ்வர் புஜாரா நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியில் இரட்டைச் சதம் அடிக்க வாழ்த்துக் கூறிய அமித் ஷாவின் வார்த்தை பொய்த்துப் போனது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகல்-இரவு டெஸ்டாக Pink-Ball Test நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பூஜாரா இரட்டை சதம் அடித்தால், அது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றிபெற உதவும் என்று சேத்தேஷ்வர் புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது ஆசையையும் முன்வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
3rd Test. 15.5: WICKET! C Pujara (0) is out, lbw Jack Leach, 34/2 https://t.co/9HjQB6CoHp #INDvENG @Paytm
— BCCI (@BCCI) February 24, 2021
மோட்டேரா மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் போட்டி பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியாக நடைபெறும். இந்த சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் வெற்றியும் மூன்றாவது சிறப்பாக பதிவாக வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆசைப்பட்டார். அதை நிறைவேற்றுவதற்கு புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று அமித் ஷா வாழ்த்து கூறியிருந்தார்.
“இந்த அரங்கம் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு (Javagal Srinath) மிகவும் மறக்கமுடியாதது. அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதே மைதானத்தில், கபில் தேவ் ரிச்சர்டின் ஹாட்லீ விக்கெட்டுகளை முறியடித்தார். இதே மைதானத்தில் சுனில் கவாஸ்கர் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதே மைதானத்தில், சச்சின் டெண்டுல்கர் 18,000 ODI ரன்களை எட்டினார். இதே மைதானத்தில் தான், சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் காலடித் தடம் பதித்த 20வது ஆண்டை நிறைவு செய்தார். இதே மைதானத்தில் புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற உதவும்” என்று நரேந்திர மோடி மைதானத்தின் தொடக்க விழாவில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.
ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது
பூஜாரா கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் விளையாடியபோது, அவர் இரட்டை சதம் அடித்தார், வலது கை பேட்ஸ்மேனான புஜாரா மீண்டும் அந்த சாதனையை அடைய வேண்டும் என்று அமித் ஷா தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR